தமிழகத்தில் மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய தொகு​தி​களில் இடைத்​தேர்​தல் வாக்​குப்​ப​திவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதியம் 1 மணி நிலவரப்படி, மதுராந்தகத்தில் 55.19%, தாராபுரத்தில் 56.09% வாக்குப்பதிவாகி உள்ளது.

வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடை​பெறவுள்​ளது. தேர்தலில் பதிவான வாக்​கு​கள் வரும் 9-ம் தேதி எண்​ணப்​பட்டு முடிவு​கள் அறிவிக்​கப்பட உள்ளன.

மது​ராந்​தகம் தொகு​தி​யில் மரகதம் குமர​வேல் ​(தவெக), பரந்தாமன் (தி​முக), கணிதா சம்​பத் ​(அ​தி​முக), சுகந்தி (மார்க்சிஸ்ட்), ஜானகி​ரா​மன் (நாம் தமி​ழர்) மற்​றும் சுயேட்​சை​கள் உட்பட 27 பேர் களத்​தில் உள்​ளனர்.

அதே​போல், தாராபுரம் தொகு​தி​யில் சத்​ய​பா​மா (தவெக), சுகன்யா(​தி​முக), பானு​ம​தி (அ​தி​முக), லட்​சுமணன் (சிபிஐ), கார்த்திகா (​நாதக) உட்பட 22 பேர் போட்​டி​யிடு​கின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal