“மதுராந்தகத்தில் வாக்காளர்களுக்கு அதிகமாக தவெக பணம் கொடுத்துள்ளதாக மக்கள் தெரிவித்தார்கள். நாங்கள் தூயசக்தி, வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டோம் என முதல்வர் விஜய் சொல்கிறார். ஆனால், இருப்பதிலேயே அதிகமாக தவெக பணம் கொடுத்துள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட கட்சியின் தலைவர்கள் பதில் சொல்ல வேண்டும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பெ.சண்முகம், “தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி இடதுசாரி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆளும் கட்சியின் எடுப்பார் கைப்பிள்ளையாக தேர்தல் ஆணையம் எப்படியெல்லாம் செயல்பட்டது என்பதை இரு தேர்தல் ஆணையர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். எஸ்ஐஆர் நடவடிக்கை மூலமாக தேர்தல் ஆணையத்தின் வேலை என்பது, அனைவருக்கும் வாக்குரிமை வழங்குவதும், அனைவரும் வாக்களிப்பதை உத்தரவாதப்படுத்துவதும், நேர்மையாக தேர்தலை நடத்துவதுமே ஆகும்.
ஆனால், வாக்குரிமையை பறிப்பது, வாக்களிக்கும் உரிமையை பறிப்பது, மோசடியாக ஆட்சியமைப்பதற்கு பாஜகவுக்கு ஆதரவாக நடந்துகொள்வது எனும் மிகப்பெரிய நம்பிக்கை துரோகத்தை இந்திய மக்களுக்கு ஞானேஷ் குமார் செய்துள்ளார். ஆகவே, அவர் ஒரு நிமிடம் கூட அவர் பதவியில் நீடிக்க அருகதை இல்லை. அவர் உடனடியாக பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும்.
இதையே திமுக, காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன. இண்டியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றாலும், ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைக்கு உடன்படுவதாக திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ஞானேஷ் குமாரை நீக்கும் தீர்மானம் வரும்போது அதற்கு ஆதரவாக திமுக இருக்கும் என அறிவித்துள்ளார். திமுகவின் இந்த அறிவிப்பை இடதுசாரிகள் வரவேற்கிறோம்.

மதுராந்தகத்தில் நாங்கள் நேற்று நோட்டீஸ் மட்டும் வழங்கி வாக்கு கேட்டோம். ஆனால், “மற்றவர்கள் எல்லாம் பணம் கொடுக்கிறார்கள்; நீங்கள் நோட்டீஸ் மட்டும் கொடுக்கிறீர்கள்” என்று மக்கள் எங்களிடம் தெரிவித்தனர். அப்போது யார் யாரெல்லாம் பணம் கொடுத்தார்கள் எனக் கேட்டோம். இருப்பதிலேயே அதிகமாக தவெக பணம் கொடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தார்கள்.
நாங்கள் தூயசக்தி, வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டோம் என முதல்வர் விஜய் சொல்கிறார். ஆனால் இருப்பதில் அதிகமாக தவெக பணம் கொடுத்துள்ளது; அதனால் நீங்களும் கொஞ்சமாவது பணம் கொடுங்கள் என மக்கள் கேட்கிறார்கள். இதற்கு சம்மந்தப்பட்ட கட்சியின் தலைவர்கள் பதில் சொல்ல வேண்டும்” என்றார்.