தலைமைச் செயலகம் (சட்டசபை) மாற்றம் குறித்த அறிவிப்பு, முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் கூட்டத்தொடரிலேயே அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகத் தலைமைச் செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வரும் சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான திட்டத்தை, தற்போது நடைபெற்று வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதல்வர் ஜோசப் விஜய் அறிவிக்க உள்ளாராம். விவாதமின்றி ஒரு முடிவை சட்டமன்றத்தில் அறிவிக்க வழிவகை செய்யும் வகையிலான ‘விதி 110’-ன் கீழ் இந்த அறிவிப்பு வரப்போகிறது என்கிறார்கள்.

புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கு மூன்று இடங்களை அதிகாரிகள் தேர்வு செய்திருப்பதாகவும் தகவல்கள் வருகிறது. அதாவது, கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகம், பட்டினப்பாக்கம் மற்றும் நந்தம்பாக்கத்தில் உள்ள பின்டெக் சிட்டிக்கு எதிரே உள்ள இடம். கிண்டியில் அரசுக்குச் சொந்தமான சுமார் 35 ஏக்கர் நிலமும், மற்ற இரு இடங்களில் 20 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களும் உள்ளன. இது ஊழியர்கள், பார்வையாளர்கள் மற்றும் வாகன நிறுத்த வசதிகளுக்குப் போதுமானதாக இருக்கும் என்று அதிகாரிகள் முதல்வர் விஜய்யிடம் கூறியிருக்கிறார்களாம்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal