தமிழக அரசுப் போக்குவரத்து கழகத்தில் டிரைவர், கண்டக்டர் பணியிடங்கள் மட்டுமின்றி தொழில்நுட்ப ரீதியிலான பணிகள், இன்ஜினியரிங் பணிகள் உள்ளிட்டவற்றிற்கும் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. அதேபோல, அவ்வப்போது தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்புகளும் வெளியாகிறது. அதாவது அப்ரெண்டீஸ் பணியிடங்களும் நிரப்பப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி? கல்வித் தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
பட்டதாரி அப்ரெண்டீஸ் (பொறியியல்) மெக்கானிக்கல் /ஆட்டோ மொபைல் – 360 காலியிடங்கள் சிவில் என்ஜினியரிங் – 26 காலியிடங்கள் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் – 41 சிஎஸ்.இ/ஐடி – 30 பிஏ, பிஎஸ்சி, பிகாம், /பிபிஏ, பிபிஎம், பிசிஏ – 623 டிப்ளமோ மெக்கானிக்கல் / ஆட்டோ மொபைல் – 338 சிவில் என்ஜினியரிங் – 20 எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங் – 30 சிஎஸ்இ/ஐடி – 53 என மொத்தம் 1,518 காலியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
மேலே குறிப்பிட்டு இருக்க கூடிய பணியிடங்களுக்கு பொருத்தமான பிரிவில் டிகிரி / இன்ஜினியரிங், டிப்ளமோ முடித்து இருப்பது அவசியம். 2022, 2023, 2024, 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் எவ்வளவு:
பட்டதாரி அப்ரெண்டீஸ் – ரூ.12.300 டிப்ளமோ முடித்தவர்களுக்கு – ரூ.10,900 என்ஜினியரிங் அல்லாத டிகிரி பணியிடஙக்ளுக்கு – ரூ.12,300 வழங்கப்படும்.
தேர்வு முறை:
தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 28.07.2026 முதல் 28.08.2026 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். https://nats.education.gov.in/ என்ற இணையதளத்தில் தேர்வு அறிவிப்பை கவனமாக படித்து உறுதி செய்த பிறகு விண்ணப்பிக்கலாம்.
