மேகதாது விவகாரத்தில் கர்நாடகா அரசை கண்டித்து தமிழக அரசு கொண்டுவந்த தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. முதலில் மறைந்த மூத்த தலைவர்கள், திரைப் பிரபலங்கள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் விஜய் மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடகா நடவடிக்கையை எதிர்த்து அரசின் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

இதனைத் தொடர்ந்து தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது அதிமுக எம்எல்ஏ சம்பத் குமார், தவெக தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி மகளிருக்கு மாதம் ரூ.2500 எப்போது அளிப்பீர்கள் என்றும் பயிர் கடன் தள்ளுபடி குறித்தும் கேள்வி எழுப்பினார்.

அப்போது பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “ஆளுநர் உரை மீதான விவாதத்தில் ஆளுநர் உரை குறித்து மட்டுமே பேசலாம். தேர்தல் வாக்குறுதி குறித்து பட்ஜெட் மற்றும் மானியக் கோரிக்கையில் பேசலாம். மற்ற கருத்துகளை பேசி திசை திருப்ப வேண்டாம்“ என்று பதில் கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன் பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்றும், ஆளுநர் உரை குறித்து மட்டுமே பேச வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குரல் எழுப்பினர். அப்போது பேசிய, அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம், உறுப்பினர்கள் என்ன பேச வேண்டும், என்ன பேச கூடாது என்று அமைச்சர்கள் கூற கூடாது என்று தெரிவித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal