“எனது அன்புச் சகோதரரின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடைய, பொதுவாழ்வில் சிறப்புடன் பணியாற்ற வாழ்த்துகிறேன்,” என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளுக்கு தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து கூறியுள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்து தமிழக முதல்வர் விஜய் சமூக வலைதளப் பதிவு வெளியிட்டுள்ளார். அதில்,”எனது அன்புச் சகோதரர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

இந்தியத் திருநாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மக்களாட்சி மாண்புகளைக் காத்திடவும், அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தாங்கள், நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், தங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையவும், பொதுவாழ்வில் சிறப்புடன் பணியாற்றிடவும் வாழ்த்துகிறேன்.” என்று முதல்வர் விஜய் கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal