தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டது. முன்னதாக, பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீனிடம் ராஜினாமா கடிதத்தை அண்ணாமலை அளித்திருந்தார். இந்நிலையில், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அண்ணாமலை கொடுத்த ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக டெல்லியில் உள்ள பாஜக தலைமையகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்ணாமலை, புதிய கட்சி தொடங்​கப் போவ​தாக செய்​தி​கள் வெளி​யாகின. சட்​டப்​பேரவை தேர்​தலுக்கு பிறகு, இது தொடர்​பாக தனது ஆதர​வாளர்களுடன் அவர் தீவிர ஆலோ​சனை​யில் ஈடு​பட்டு வந்​தார்.

இந்​தச் சூழலில், கடந்த 1-ம் தேதி டெல்லி சென்ற அண்​ணா​மலை, பாஜக தேசி​யத் தலை​வர் நிதின் நவீனை சந்​தித்​து, கட்​சி​யில் இருந்து வில​கு​வ​தாக கடிதம் கொடுத்​த​தாக தகவல் வெளி​யானது. பின்​னர், மத்​திய உள்துறை அமைச்​சர் அமித் ஷாவை​யும் சந்தித்துப் பேசி​னார்.

ஆனால், அவரது ராஜினாமா கடிதம் உடனடியாக ஏற்கப்படவில்லை. அண்​ணா​மலையை சமரசம் செய்ய தீவிர முயற்​சிகள் மேற்​கொள்​ளப்​பட்​டதாகக் கூறப்பட்டது.

பிரதமர் நரேந்​திர மோடியை​யும் சந்​தித்​துப் பேசி​விட்​டு, இன்று தமிழகம் திரும்பி தனது முடிவை அறிவிக்க அண்​ணா​மலை திட்டமிட்​டுள்​ள​தாக தகவல்​கள் வெளியாகின. மேலும்​, சமூக ஊடகங்கள் வாயி​லாக நேரடி​யாக மக்​களிடம் உரை​யாட உள்ளதாகவும் அண்ணா​மலை கூறியிருந்தார்.

இந்​நிலை​யில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அளித்திருந்த ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக டெல்லியில் உள்ள பாஜக தலைமையகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்​கத்​தில், “ஜூன் 5-ம் தேதி (இன்​று) மதி​யம் 12 மணிக்​கு, சமூக வலை​தளங்​கள் மூலம் உங்​கள் அனை​வரை​யும் சந்​தித்​து, கருத்​துகளை பகிர்ந்து கொள்​ள​வும், மனம் திறந்து உரை​யாட​வும் ஆவலுடன் எதிர்​ நோக்கி இருக்​கிறேன்” என்று பதி​விட்​டுள்​ளார்.

அத்​துடன் தனது இன்​ஸ்​டாகி​ராம், ஃபேஸ்​புக், யூடியூப் மற்​றும் எக்ஸ் தள கணக்​கு​களின் லிங்​கு​களை​யும் அவர் பகிர்ந்​துள்​ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் தனித்து வெற்றி பெற்று திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியைக் கடத்தியது. குறிப்பாக அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜகவின் வாக்கு சதவீதம் அதலபாதாளத்துக்குச் சென்றது.

இந்நிலையில், தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் தவெகவின் அமோக வெற்றிக்கு இளைஞர்களின் பேராதரவே காரணம் என்று கூறப்பட்டது. இந்தச் சூழலில் விஜய்க்கு முன்னரே தமிழக அரசியலில் தன் பக்கம் இளைஞர்களை ஈர்த்திருந்த அண்ணாமலை அதைவைத்தே அரசியலில் அடுத்த நகர்வை எடுக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன் நிமித்தமாகவே இளைஞர்கள் களமாடும் சமூக வலைதளங்களில் நேரடியாக தொடர்பு கொள்ள அவர் ஆயத்தமாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal