அ.தி.மு.க.வின் ஆதரவில் த.வெ.க.வை பா.ஜ.க. தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது என ‘பிகிலும்… திகிலும்-..!’ எனும் தலைப்பில் மர்மத்தை உடைத்திருக்கிறார் மருது அழகுராஜ்!

தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் தனது வலைதளப் பக்கத்தில்…
‘#பிகிலும்… #திகிலும்..’ எனும் தலைப்பில்,
‘‘வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஊழலில் ஊறிய உத்தமர்களை எல்லாம் ஏற்கெனவே தத்தெடுத்து வைத்திருக்கும் பாஜக…
தாங்கள் திட்டமிட்டபடி அதிமுகவை முடித்த கையோடு, இப்போது அந்த அதிமுகவில் தப்பிப் பிழைத்த முப்பது எம்எல்ஏக்களை தவெக பக்கமாக நகர்த்தவும் ஏற்கெனவே தவெகவோடு ஒட்டிக் கொண்டுள்ள காங்கிரஸ், விசிக, இடதுசாரிகளை அங்கிருந்து துரத்தவும்…
பிறகு வேலுமணி, விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் உள்ளிட்டோரை தவெகவின் அமைச்சரவையில் பங்கேற்க வைத்து தவெகவை பாதி அதிமுகவாக மாற்றி…
அதன் மூலம் முற்றிலுமாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் விஜய்யை கொண்டு வரவும் துரிதமான ஏற்பாடுகளை அது செய்து வருகிறது.
குறிப்பாக காங்கிரஸை தமிழ்நாட்டில் நடுத்தெருவில் நிறுத்துவது என்பதைமிகக் குறியாக கொண்டு அது காய்நகர்த்தி வருகிறது.
ஏற்கெனவே தங்களால் தவெகவுக்குள் புகுத்தப்பட்டுள்ள செங்கோட்டையன் பாஜகவின் முன்னாள் ஐ.டி. விங் செயலாளர் நிர்மல்குமார் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி அருண்ராஜ் மற்றும் “லாட்டரி மார்ட்டின்” குடும்பத்தார்.
இவர்களோடு கோவை ஆர்.ஸ்.எஸ் மாநாட்டில் சகோதரர் சகிதமாக பங்கேற்ற வேலுமணி..
குமரியில் அதே ஆர்.எஸ்.எஸ். பேரணியை தொடங்கி வைத்து எடப்பாடியின் நடவடிக்கைக்கு ஆளான தளவாய் சுந்தரம் இவர்களோடு குட்கா வழக்கில் சிபிஐயிடம் சிக்கியுள்ள விஜயபாஸ்கர் என அதிமுகவிலிருந்து இப்போது நகர்த்தப்படும் இந்த தத்துப் பிள்ளைகளும் இணைந்து ஆர்எஸ்எஸ்- பாஜகவின் பாதளத் திட்டங்களை கச்சிதமாக நிறைவேற்ற அனைத்து கால அட்டவணைகளும் தயாராகி விட்டது.
ஆம்! ஆள முடியாத மண்ணின் ஆள்வோரை அடிமையாக்குவது பிறகு அந்த அடிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக தங்களது உடமையாக்குவது என்னும்
காவிகளின்
சூழ்ச்சியால்
கபளீகரமான
மராட்டிய
தாக்கரேக்கள்
பீகாரின் நிதீஷ்குமாரர்கள்
என்னும்
வரிசையில்
அடுத்து
நம்ம
“பிகிலு” தான்..
என்னநாஞ்
சொல்றது’’ என பதிவிட்டிருக்கிறார்.
அ.தி.மு.க.வுக்கு ஆறு அமைச்சர்கள் எட்டு வாரியத் தலைவர்கள் பதவி கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தகவலை பத்திரிகையாளர் சந்திப்பிலும் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.
