‘‘நாங்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில்தான் இருக்கிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை’’ என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், விஜய்​யின் தவெக 108 இடங்களைக் கைப்​பற்றி இருக்கிறது. இருப்பினும், ஆட்சி அமைக்​கத் தேவை​யான பெரும்​பான்மை பலமான 118 இடங்​களைப் பெறாத​தால், தமிழகத்தில் தற்​போது ‘தொங்கு சட்டப்​பேர​வை’ அமை​யும் சூழல் உரு​வாகி​யுள்​ளது. இந்நிலையில், ஆட்சி அமைக்க இன்​னும் 10 இடங்​கள் தேவைப்​படு​வ​தால், தேமுதிக, விசிக உள்ளிட்ட மற்ற கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளது.

இந்நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களிடம் பேசும்போது, “புதிதாக வந்திருக்கும் விஜய்க்கு எனது வாழ்த்துகள். நாங்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில்தான் இருக்கிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை.

விஜய் எங்கள் வீட்டு பிள்ளை. அவருக்கு வாழ்த்துகள். விஜய் எங்களுக்கு புதியவர் இல்லை. அவர் இப்போதுதான் அரசியலுக்கு வந்திருக்கிறார். மக்களுக்கு நல்லது செய்யப்பட்டும்” இவ்வாறு அவர் கூறினார்.

த.வெ.க.வுக்கு வாழ்த்துச் சொன்ன பிரேமலதா, அக்கட்சிக்கு ஆதரவு அளிக்க வாய்ப்பில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal