தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமார் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக புதிய உள்துறை செயலாளராக கே.மணிவாசனை தேர்தல் ஆணையம் நியமித்து உத்தரவிட்டுள்ளது. அவர் இன்று மாலை 5 மணிக்குள் பதவியேற்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவர் சுற்றுலா துறை செயலாளராக இருந்தவர்.

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி தொடங்கி சென்னை மாநகர ஆணையர் வரை தேர்தல் ஆணையத்தால் மாற்றப்பட்ட நிலையில் தற்போது உள்துறை செயலாளர் மாற்றப்பட்டுள்ளார். மாற்றப்பட்டுள்ள தீரஜ்குமாருக்கு தேர்தல் தொடர்பான எந்த பதவியும் வழங்கக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal