முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நான்தான் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை காப்பாற்றி கொடுத்தேன். அப்படிப்பட்ட எனக்கே சீட் கொடுக்கவில்லை என அவிநாசியின் சிட்டிங் எம்எல்ஏவும், முன்னாள் சபாநாயகருமான தனபால் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முன்னாள் சபாநாயகர் தனபால், அவிநாசி தொகுதியில் போட்டியிட நான் விருப்பனு அளித்திருந்தேன். ஆனால் அவிநாசி தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. இந்த தகவலை கூட கட்சி சார்பில் என்னை அழைத்து சொல்லவே இல்லை.

அவிநாசி போய்விட்டதால் வேறு தொகுதியில் போட்டியிடுகிறீர்களா என்று கூட அவர்கள் என்னை கேட்கவில்லை. சிட்டிங் எம்எல்ஏ, முன்னாள் சபாநாயகரான எனக்கு சீட் வழங்கவில்லை, எனக்கு மரியாதையும் கொடுக்கவில்லை.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்ததும் தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய போது அவர்களை தகுதி நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை நான்தான் காப்பாற்றிக் கொடுத்தேன். அப்படிப்பட்ட எனக்கே சீட் கொடுக்கவில்லை’’ என்று தனது மனக்குமுறலை கொட்டியுள்ளனர்.

எம்.ஜி.ஆர். காலத்து அரசியல்வாதி சேலம் செம்மலை, கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே எம்.எல்.ஏ.வான முசிறி சிவபதி உள்ளிட்டோருக்கே எடப்பாடி பழனிசாமி வாய்ப்பு வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
