த.வெ.க. தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் 234 வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று மார்ச் 29-ந் தேதி அறிவித்து வருகிறார்.

சென்னை தாஜ் ஹோரமண்டல் நட்சத்திர விடுதியில் 234 வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டத்தை நடத்துகிறார் தவெக தலைவர் விஜய். இந்தக் கூட்டத்தில் புதுச்சேரியில் தவெக போட்டியிடும் 30 தொகுதிகளின் வேட்பாளர்களும் அறிமுகப்படுத்துகிறார்.

சட்டசபை தேர்தலில் தவெக வேட்பாளர்களுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்தே போட்டியிடுகிறது.

த.வெ.க. சார்பில் போட்டியிடுபவர்கள் வேட்பளார்கள் அல்ல ‘காப்பாளர்கள்’ எனக்கூறி வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகிறார். அதன்படி தி.நகர், புஸ்ஸி ஆனந்த், கோபிசெட்டிப் பாளையம் கே.ஏ.செங்கோட்டையன், ஆயிரம் விளக்கு ஜே.சி.டி.பிரபாகர், லால்குடி கு.ப.கிருஷ்ணன் என 234 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து வருகிறார் விஜய்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal