திமுக கூட்டணியிலிருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி விலகுவதாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தவாக தலைவர் வேல்முருகன், “2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முதல் திமுக கூட்டணியில் இடம்பெற்று மதசார்பற்ற சக்திகளோடு கூட்டணியில் பயணித்து வந்தோம். இந்தச் சூழலில் திமுக பேச்சு வார்த்தைக்குழுவுடன் முதல் கட்ட பேச்சு வார்த்தையில் ஈடுபட்டோம். அதில் எங்களுக்கு ஒரு இடத்தை ஒதுக்குவதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நாங்கள் ஒரு இடத்தை எங்களால் ஏற்க முடியாது என்றும், கூடுதல் இடங்கள் ஒதுக்க வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தோம். மேலும், தமிழக மக்களின் நலனுக்கான திமுக அரசிடம் 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தோம். எங்கள் கோரிக்கைகளை அரசு பொருட்படுத்தவில்லை. இதனால் திமுக கூட்டணியில் இருந்து தவாக விலகுகிறது.” என்றார்.
அடுத்ததாக, அ.தி.மு.க. கூட்டணியில் த.வா.க. இணைவதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கியிருப்பதாக தகவல்கள் வருகிறது.
