த.வெ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட உத்தேச பட்டியல் வெளியாகியிருக்கிறது.

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை த.வெ.க. பெற்றது. 4,200-க்கும் மேற்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்தது.

இந்தநிலையில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் விஜய் இன்று முதல் நேர்காணல் நடத்த உள்ளார். இதற்காக பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

இன்று காலை 10.30 மணிக்கு நேர்காணல் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில்தான் த.வெ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியிருக்கிறது.

அதன்படி முதற்கட்ட பட்டியலை பார்ப்போம்…

பெரம்பூர் – விஜய்
திருச்சி கிழக்கு – விஜய்

தி.நகர் – என்.ஆனந்த்

கோபிச்செட்டிப்பாளையம் – செங்கோட்டையன்

ஸ்ரீரங்கம் – கு.ப.கிருஷ்ணன்

திருச்செங்கோடு – அருண்ராஜ்

உசிலம்பட்டி (அ) திருப்பரங்குன்றம் – சி.டி.ஆர்.நிர்மல்குமார்

வில்லிவாக்கம் – ஆதவ் அர்ஜுனா

மயிலாப்பூர் – வெங்கட்ராமன்

எழும்பூர் – ராஜ்மோகன்

மாதாவரம் – விலி பிரபு

திருவொற்றியூர் – மரிய வில்சன்

அம்பத்தூர் – ஜே.சி.டி. பிரபாகர்

ராயபுரம் (அ) மதுரவாயல் – ரேவந்த்

ஆர்.கே. நகர் – வி.எஸ்.பாபு (இவரை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட வைக்கவும் முயற்சி உள்ளது)

துறைமுகம் – சினோரா அசோக்

சேலம் தெற்கு – பார்த்திபன்

திருக்கோவிலூர் – பரணிபாலாஜி

அரியலூர் – சிவா

அந்தியூர் – வெங்கடேஷ்

கோவை வடக்கு – சம்பத் குமார்

கரூர் – மதியழகன்

தூத்துக்குடி – சாமுவேல்

சோழிங்கநல்லூர் – ஈ.சி.ஆர் சரவணன் (இந்த தொகுதி அருள் பிரகாசம் என்பவருக்கு ஒதுக்கப்பட்டால் ஆலந்தூரில் போட்டியிடுவார்)

சேப்பாக்கம், திருவல்லிக்கேணி – மோகன கிருஷ்ணன்

திருமங்கலம் – ராஜ்மோகன் வேலா ராமமூர்த்தி (இவர் திருப்பரங்குன்றம் தொகுதியை கேட்டுகொண்டுள்ளார்)

புதுக்கோட்டை – பர்வேஸ்

காரைக்குடி – பிரபு

தஞ்சாவூர் – சரவணன்

த.வெ.க. சார்பில் மேற்குறிப்பிட்ட வேட்பளார்கள் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது என்கிறார்கள் பனையூர் அலுவலகத்தில்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal