திரு​வள்​ளூர் நகராட்​சி​யின் 6-வது வார்டு திமுக கவுன்​சில​ராக இருப்​பவர் பிர​பாகரன். இவரது நண்​பர் தியாகு, இரு​வரும் கடந்த மாதம் 25-ம் தேதி, சென்​னையி​லிருந்து டெல்​லிக்கு விமானத்​தில் சென்​றுள்​ளனர். பயணத்​தின்​போது இரு​வரும் மது​போதை​யில் இருந்​த​தாகக் கூறப்​படு​கிறது.

அப்​போது விமானத்​தில் பணி​யில் இருந்த 25 வயதுடைய பணிப்​பெண்​ணின் ஊர் பெயரை கேட்டு தொடர்ந்து கேலி செய்​த​தாகக் கூறப்​படு​கிறது. ஒரு கட்​டத்​தில் எல்லை மீறி அந்த பெண்​ணைத் தொட்டு பாலியல் அத்​து​மீறலில் ஈடு​பட்​ட​தாக​வும் தெரி​கிறது. அந்த பெண், விமானம் டெல்லி சென்​றடைந்​ததும் தனது உயர் அதி​காரி​களிடம் தெரி​வித்​துள்​ளார். அவர்​கள் சென்னை மீனம்​பாக்​கம் மகளிர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தனர்.

இதையடுத்​து, பிர​பாகரன் மற்​றும் தியாகு​விடம் போலீ​ஸார் விசா​ரித்​தனர். மேலும், அடுத்​தகட்ட விசா​ரணைக்கு நேரில் ஆஜராக வேண்​டும் என அறி​வுறுத்தி உள்​ளனர். ஆனால், இரு​வரும் ஆஜராக​வில்​லை. அதைத்​தொடர்ந்​து, அவர்​கள் மீது பாலியல் துன்​புறுத்​தல் மற்​றும் பெண்​கள் வன்​கொடுமை தடுப்​புச் சட்​டம் ஆகிய பிரிவு​களின் கீழ் வழக்​குப்​ப​திவு செய்​தனர்.

இதற்​கிடையே, நேற்று முன்​தினம் மாலை பிர​பாகரனும், தியாகு​வும் டெல்​லியி​லிருந்து விமானம் மூலம் சென்னை திரும்​பி​யுள்​ளனர். இதை அறிந்த போலீ​ஸார், வி​மான நிலை​யம் சென்று இரு​வரை​யும் கைது செய்​து வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal