ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று 3 ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

முக்கிய வாக்குறுதியாக, ‘‘ அதிமுக ஆட்சி அமைந்தால் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்வோம்’’ என்று எடப்பாடி அறிவித்துள்ளார். மேலும் தைப்பொங்கல் அன்று பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் பொங்கல் பரிசாக வழங்கப்படும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத்தொகையாக ரு.10 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாகவும் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். இந்த தேர்தல் அறிக்கையில், பொது மக்களை கவரும் வகையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெறுவது வழக்கம். அந்த வகையில் அதிமுக சார்பில் ஏற்கனவே இரண்டு கட்டமாக வாக்குறுதிகளை அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று அதிமுகவின் 3ம் கட்டமாக தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- ‘‘ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் அன்று பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் பொங்கல் பரிசாக வழங்கப்படும். கைதத்த்றி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் விலையில்லா மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாக உயர்த்தப்படும்.

விசைத்தறி நெசாவாளர்களுக்கு தற்போது இலவச மின்சாரம் ஆயிரம் யூனிட்டில் இருந்து 1,400 யூனிட்டாக உயர்த்தி வழங்கப்படும். நகரபகுதியில் நடைபாதை ஓராமாக கடை வைத்து இருக்கும் சிறு வியாபாரிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு மாதம் தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal