இன்றைய காலகட்டத்தில் இளந் தலைமுறையினருக்கு படிப்பு மட்டுமே வாழ்க்கையை உச்சத்திற்கு கொண்டு செல்லும். முதல் மதிப்பெண் பெற்றால், முதல்வரை சந்தித்து வாழ்த்து பெறலாம் என்பதை, இந்த முறை முதல்வர் மு.க.ஸ்டாலின் உணர்த்தியிருந்தார்.

இந்த நிலையில்தான், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் திருநெல்வேலி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துச் வல்லநாடு பகுதியைச் சேர்ந்த பிரபாகர் சாதித்திருக்கிறார். வல்லநாடு பகுதியைச் சேர்ந்த மாணவர் அர்ஜுன் பிரபாகர்அண்மையில் கனிமொழி எம்.பி.யை சந்திக்கையில், வீட்டுமனைப் பட்டா வேண்டி கோரிக்கை வைத்திருந்தார். இன்றைக்கு மாணவர் அர்ஜுன் பிரபாகரிடம் அரசு சார்பில் இலவச வீட்டுமனைப்பட்டாவை தூத்துக்குடி எம்.பி.யும், தி.மு.க. துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி எம்.பி. வழங்கி, அவரது கோரிக்கையை நிறைவேற்றியிருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மாநகராட்சி மேயர் திரு.ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் திரு. தினேஷ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவனின் கனவை நனவாக்கிய கனிமொழி எம்.பி.க்கு, அம்மாவட்ட மக்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டுக்களை தெரிவித்தனர்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal