கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி திடீர் என்று பணமதிப்பிழப்பு நடவடிக்கை செய்யப்பட்டது. இதன் காரணமாக அப்போது வழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்பட்டது.பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறப்பட்ட இந்த நடவடிக்கை காரணமாக தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து இருக்கிறது.

அப்போது 1000 ரூபாய்க்கு பதிலாக 2 ஆயிரம் ரூபாய் அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது நாடு முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பபெற ஆர்பிஐ முடிவு செய்துள்ளது.

2000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் எந்த வங்கியிலும் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். அல்லது இன்று முதல் தங்கள் சொந்தக் கணக்கில் 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யலாம். 2000 ரூபாயை மாற்றும் வசதி செப்டம்பர் 30, 2023 வரை இருக்கும் என்று ஆர்பிஐ தெரிவித்து உள்ளது . ரூ.2000 கரன்சி நோட்டுகள் செப்டம்பர் 30க்குப் பிறகும் சட்டப்பூர்வமான டெண்டராகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் ஆர்பிஐ உத்தரவிட்டு உள்ளது.

ஆனால் இதன் அர்த்தம் இந்த பணம் செல்லுபடியாகாது என்பதல்ல. இந்த பணம் செல்லுபடியாகும். கையில் உள்ளவர்கள் பணத்தை கடைகள் எப்போதும் போல வாங்கிக்கொள்ள வேண்டும். அதை வங்கிகளில் ஒப்படைக்க வேண்டும். எந்த வங்கியில் வேண்டுமானாலும் கொடுத்து பணத்தை மாற்றிக்கொள்ள முடியும். 20 ஆயிரம் ரூபாய் வரை ஒரு நாளுக்கு மாற்ற அடையாள அட்டை தேவை கிடையாது.

அதற்கு மேல் ஒரு நாளில் மாற்ற வேண்டும் என்றால் அடையாள அட்டை தேவை. இந்த நோட்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை செல்லுபடியாகும். அதன்பின் இந்த பணம் மொத்தமாக புழக்கத்தில் இருந்து நீக்கப்படும். ரிசர்வ் வங்கி சட்டத்தின் 24(1) பிரிவின் கீழ் இந்த ரூபாய் நோட்டுகள் நீக்கப்பட்டு உள்ளன. இப்படிப்பட்ட நிலையில்தான் தற்போது சில வங்கிகள் 20 ஆயிரத்திற்கு கீழ் உள்ள 2 ஆயிரம் நோட்டுகளை மாற்றினாலும் கூட அடையாள அட்டை கேட்கிறாரக்ள்.

தற்போது வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள வங்கியின் கிளைக்குச் சென்று ரூபாயை கொடுத்து பணத்தை மாற்றுக்கொள்ள முடியும்.வங்கிகளில் நாம் பணத்தை மாற்ற வேண்டும் என்று சொன்னதும்.. அவர்கள் ஒரு ஸ்லிப் கொடுப்பார்கள். அதை வாடிக்கையாளர் பூர்த்தி செய்ய வேண்டும். இதில் பணம் மாற்றும் நபரின் பெயர் போன்ற அடிப்படை விவரங்கள் மற்றும் எத்தனை 2000 நோட்டுகள் உள்ளன என்ற எண்ணிக்கை மற்றும் அதன் மதிப்பு போன்ற .விவரங்களை கொடுக்க வேண்டும். மேலும் வாடிக்கையாளர்கள் பரிமாற்றம் செய்யப்படும் இடம் மற்றும் தேதியையும் குறிப்பிட வேண்டும்.

பின்னர் இதில் கையெழுத்து போட்டு 2000 ரூபாயுடன் கொடுத்தால் பணத்தை மாற்றிக்கொள்ள முடியும். இந்த ஆவணத்தை நிரப்ப ஆதார் கார்ட் உள்ளிட்ட கேஒய்சி விவரங்களை வழங்க வேண்டும் என்று வங்கிகள் கேட்கிறார்கள். இதன் காரணமாகவே சில வங்கிகள் 20 ஆயிரத்திற்கு கீழ் உள்ள 2 ஆயிரம் நோட்டுகளை மாற்றினாலும் கூட அடையாள அட்டை கேட்கிறார்கள். அடையாள அட்டையை பார்த்தே அவர்கள் கேஒய்சி விவரங்களை நிரப்புகிறார்கள். 20 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் அடையாள அட்டை தேவை இல்லை என்று ஆர்பிஐ கூறியும் கூட கேஒய்சியை நிரப்ப வங்கிகள் அடையாள அட்டையை கேட்கின்றன.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal