பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் இலங்கையைச் சேர்ந்தவர். செய்தி வாசிப்பாளராக தனது கேரியரைத் தொடங்கிய லாஸ்லியாவுக்கு பிக் பாஸ் பிறகு படங்களில் நடிகையாக வாய்ப்பு கிடைத்தது.
இந்த வகையில் பிக் பாஸ் தர்ஷனுக்கு ஜோடியாக கூகுள் குட்டப்பா என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் கே எஸ் ரவிக்குமாரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் தோல்வியை தழுவியது. இதற்கும் முன்னதாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உடன் பிரண்ட்ஷிப் படத்தில் நடித்திருந்தார்.
அந்தப் படமும் படுமோசமான தோல்வியை அடைந்தது. இதனால் தற்போது அம்மணிக்கு பட வாய்ப்பு குறைந்து விட்டது. இதனால் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை லாஸ்லியா வெளியிட்டு வருகிறார். பிக் பாஸில் இருந்த போது சற்று குண்டாக இருந்த லாஸ்லியா இப்போது ஸ்லிம்மாக மாறி உள்ளார்.
இந்நிலையில் பிரபல ஹோட்டல் ஒன்றில் லாஸ்லியா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அதாவது ஷார்ட் அணிந்து குட்டையான பாவாடை அணிந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பிக் பாஸ் லாஸ்லியாவா இது என வாயை பிளந்துள்ளனர். லாஸ்லியா எவ்வளவு தாராளமான கவர்ச்சி காட்டினாலும் அவருக்கு பட வாய்ப்பு வருவதில்லையாம்.
ஆனாலும் மனம் தளராத அவர் தொடர்ந்து இது போன்ற போட்டோ ஷீட் எடுத்து வெளியிட்டு வருகிறார். இவ்வாறு மார்க்கெட் குறைய குறைய லாஸ்லியா ட்ரெஸ்ஸயும் குறைத்துக் கொண்டு வருகிறார். இந்த அளவுக்கு கவர்ச்சி காட்டுவதால் ஒருவேளை ஹாலிவுட் படத்தில் வாய்ப்பு தேடுகிறாரோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.