ஒரு சில சாமியார்கள் செய்யும் தவறுகளால், இன்றைக்கு ஒட்டுமொத்த சாமியார்கள் மீதான எண்ணவோட்டம் வேறுமாதிரியாக இருக்கிறது. குறிப்பாக சொல்லவேண்டுமானால், ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் ஆரம்பத்தில் பிரபலமாகவும், அதன் பிறகு தலைமறைவு வாழ்க்கைக்கு தள்ளப்படுகிறார்கள்.

காரணம், அவர்களது சல்லாபங்கள் வெளிச்சத்திற்கு வரும்போது, ‘இவரா… இப்படி..?’ என எண்ணத்தோன்றுகிறது. அந்த வகையில்தான் ஒரு சாமியார் செய்த காரியம் இந்தியாவையே நடுநடுங்க வைத்திருக்கிறது.

ஆந்திர மாநிலம் குண்டூரில் அப்பாவி பெண்களை வைத்து நிர்வாண பூஜை நடத்தியுள்ளனர். இந்த விவகாரத்தில் போலீசார் ஒரு பெண் உட்பட 11 பேரைக் கைது செய்துள்ளனர். இரண்டு சிறுமிகளையும் மீட்டுள்ளனர்.

ஒரு மணி நேரம் நடக்கும் சடங்குகளில் பங்கேற்றால், தலா ஒரு லட்சம் தருவதாகக் கூறி அவர்கள் சிறுமிகளை ஏமாற்றியுள்ளனர். அவர்களை முதலில் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேகல்லு கிராமத்திற்கு அழைத்து வந்ததாகவும், பின்னர் அவர்களை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இருப்பினும், அவர்களின் நடத்தையில் சிறுமிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த சிறுமிகளில் ஒருவர், திஷா செயலி மூலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நல்லபாடு டிஎஸ்பி எம்டி மகபூப் பாஷா, சிஐ பி. ஸ்ரீனிவாஸ் ராவ் ஆகியோர் தலைமையிலான போலீசார் மாணவிகளை மீட்டனர். இந்த வழக்கில் போலி சாமியார் நாகேஸ்வர ராவ் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீஸார் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், ‘‘உடன் படிக்கும் மாணவர்கள் மூலம் அவர்கள் சிறுமிகளை இதில் சிக்க வைத்துள்ளனர். முதலில் மே 8ஆம் தேதி பஸ்ஸில் குண்டூருக்கு அழைத்து வந்து லாட்ஜில் தங்க வைத்தனர். அடுத்த நாள், சிறுமிகளை பொன்னேக்கல்லுவில் உள்ள நாகேஸ்வர ராவ் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு இரவு 11 மணியளவில் இரண்டு சிறுமிகளை வைத்து நிர்வாணமாகப் பூஜை செய்துள்ளனர்’’ என்றார்.

அதைத் தொடர்ந்து மே 10ஆம் தேதி அவர்கள் சிறுமிகளை சிலக்கலூரிப்பேட்டையில் உள்ள அரவிந்த என்பவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று மீண்டும் இதேபோன்ற பூஜைகள் செய்ததாகக் கூறப்படுகிறது. அங்கே அந்த போலி சாமியார் அந்த மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், மாணவிகள் அதை எதிர்த்தபோது அவர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது.

அதன் பின்னர் மீண்டும் சிறுமிகளை மீண்டும் பொன்னேக்கல்லுக்கு அழைத்துச் சென்ற போது தான், அவர்களில் ஒருவர் போலீசாருக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளார். அவர்கள் எச்சரிக்கை கொடுத்த அடுத்த 10ஆவது நிமிடம் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அவர்களை மீட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் துரிதமாகச் செயல்பட்ட போலீசாரை மக்கள் பாராட்டி வருகின்றனர்.

இப்போது கைது செய்யப்பட்ட 11 பேர் மீது கடத்தல், பலாத்கார முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் மேலும் சிலரையும் கைது செய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மாணவிகளைப் பூஜை என்ற பெயரில் கடத்தி அவர்களிடம் அத்துமீறிய இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal