பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பெற்றோர்கள் எவ்வளவுதான் அறிவுரை கூறினாலும், அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. ‘சொல்லி திருந்தாதவர்கள் பட்டு திருந்துவர்கள்’ என்பதுதான் தற்போதைய நிலையாக இருக்கிறது.

விழுப்புரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது தேர்வு முடிந்து விடுமுறையில் வீட்டில் இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிறுமியின் வயிற்றில் மாற்றம் இருந்ததை பெற்றோர் கவனித்தனர்.

இந்த நிலையில் திடீரென சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டு சத்தம் போட்டார். உடனே அவரது பெற்றோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாகவும், சில மணி நேரத்தில் குழந்தை பிறந்து விடும் என கூறி உள்ளார். இதனை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அதன் படி சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.

இது தொடர்பாக சிறுமியிடம் பெற்றோர் விசாரித்த போது அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் அதே பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்ததாகவும், தன்னிடம் ஆசை வார்த்தை கூறி தவறாக நடந்து கொண்டதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்படி சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

ஒரு சில ஆசிரியைகளே, மாணவர்களுடன் தவறான நோக்கத்தில் சமீபகாலமாக நடந்து கொள்வதும் அதிகரித்து வருகிறது. எனவே, மாணவ, மாணவிகளுக்கு ‘செக்ஸ்’ பற்றிய விழிப்புணர்வு கவுன்சிலிங் கொடுத்தால், குற்றம் கொஞ்சமாவது குறைய வாய்ப்பிருக்கும்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal