தமிழக சட்டப்பேரவையில் இன்று 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்ற வழிவகை செய்யும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பேசிய முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், ‘‘இந்த சட்ட மசோதா தொழிற்சாலைகளை பாதுகாக்கும் அதே நேரத்தில் தொழிலாளர் நலனையும் பாதுகாக்க வேண்டும்” என்றார்.

“சட்டமன்றத் தேர்வு குழுவுக்கு சட்ட மசோதாவை அனுப்ப வேண்டும்” இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தியது. இதன் பின்னர் பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், ‘‘தொழிலாளர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படாத வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது’’ என்றார். அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், “12 மணி நேர வேலை மசோதா விவகாரத்தில் உயர் மட்ட குழு அமைக்கப்படும். எந்த தொழிலாளர்கள் விரும்புகிறார்களோ அவர்களுக்கு மட்டுமே புதிய சட்டம் பொருந்தும். தன்னார்வ அடிப்படையில் 12 மணி நேரம் வேலை செய்வதாக கூறுவதற்கு மட்டுமே சட்டம் பொருந்தும். தொழிற்சாலைகளில் நெகிழ்வுத் தன்மை வரவேண்டும் என்பதற்காக சட்டம் கொண்டுவரப்படுகிறது. மத்திய அரசு கொண்டு வந்ததற்காக கொண்டு வரவில்லை. சிறு தொழில்களுக்கு மட்டுமே சட்டம் பொருந்தும்” என்றார்.

இந்த சட்ட மசோதாவுக்கு திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், மதிமுக மற்றும் பாமக எதிர்த்தது. கூட்டணி கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் சட்டப்பேரவையில் 12 மணி நேர வேலை மசோதா நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில் வெளிநடப்பு செய்த விசிக உறுப்பினர் சிந்தனைச் செல்வன், திமுகவின் அனைத்து கூட்டணி கட்சிகளும் இந்த மசோதாவை எதிர்க்கின்றன என்றார்.

தமிழ்நாட்டில் மட்டுமின்றி நாடு முழுக்க தற்போது பணி நேரம் 8 மணி என்ற அளவில் உள்ளது. அதாவது எந்த வேலையாக இருந்தாலும் 8 மணி நேரம் மட்டுமே பார்க்க வேண்டும் என்ற விதி உள்ளது. இதைத்தான் 12 மணி நேரமாக மாற்றும் மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது.

இந்த ,சட்டப்படி, காலை 7 மணிக்கு அலுவலகம் சென்றால் மாலை 7 மணிக்கு திரும்பும் வகையில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது.ஐடி நிறுவனங்கள் சில வைத்த கோரிக்கை காரணமாவும், உற்பத்தியை பெருக்கவும், முதலீட்டை அதிகரிக்கவும் இந்த முறையை கொண்டு வர மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளது.

சட்டம் என்ன சொல்கிறது..?

இந்த சட்டப்படி ஒரு தனியார் நிறுவனம் தனது ஊழியர்களுக்கான வேலை நிறுத்தத்தை 12 மணி நேரம் வரை நீட்டிக்க முடியும். இதற்கு முன் 8 மணி நேரத்திற்கு மேல் நீட்டிக்க முடியாது என்பது நீக்கப்பட்டு உள்ளது. ஆனால் 12 மணி நேரம் என்பது கட்டாயம் கிடையாது. அதனால் 8 மணி நேரம் கட்டாயம் என்று இருப்பது போல 12 மணி நேரம் கட்டாயம் கிடையாது. 12 மணி நேரம் வேண்டாம் என்றால் ஊழியர்கள் தங்கள் நிறுவங்களிடம் மறுக்க முடியும்.

தமிழ்நாட்டில் முதலீடு அதிகரித்தாலும் ஐடி நிறுவனங்களின் வருவாய் குறைவாக உள்ளது. ஐடி துறையில் பெங்களூர் அளவிற்கு நாம் இன்னும் முன்னேறவில்லை. ஐடி நிறுவனங்களை இங்கே கொண்டு வர கவர்ச்சிகரமான அறிவிப்புகளை நாம் வெளியிட வேண்டும். வேலை நேரத்தை அதிகரிப்பதன் மூலம் ஐடி நிறுவனங்கள் அதிக அளவிற்கு தமிழ்நாடு நோக்கி வரும் என்பதால் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.

கடந்த காலங்களில் அரசு ஊழியர்களின் வாக்கு அப்படியே தி.மு.க.விற்கு விழுந்தது. முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அந்த நிலைமாறியது. தற்போது, தனியார் தொழிலாளர்களும் அரசு மீது கடுங்கோபத்தில் உள்ளன.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal