திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்து ஜொலித்தவர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா இருவர் மட்டும்தான். இந்த நிலையில்தான் எம்.ஜி.ஆர். பாணியில் விஜய் அரசியலில் களம் காண இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் ஆரம்பிக்கும் பொழுதே அவர் அரசியலில் இறங்கப் போவது உறுதியான ஒன்றுதான். இருந்தாலும் இதற்கு முன் அரசியலுக்கு வந்த நடிகர்களின் கசப்பான அனுபவங்களை கருத்தில் கொண்டு விஜய் இன்று வரைக்கும் அரசியலில் ஆழம் பார்த்துக் கொண்டிருக்கிறார். எப்படியும் 2026 தேர்தலில் விஜய் களம் காணுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை கண்டது மக்கள் திலகம் எம்ஜிஆர் மட்டும் தான். எம்ஜிஆர் முதன் முதலில் கட்சி ஆரம்பிக்கும் பொழுது அவருடன் ஜோடி சேர்ந்த நடிகைகளை கட்சிக்குள் கொண்டு வந்தார். எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தபோது அதில் மூன்றாவதாக உறுப்பினராக சேர்ந்ததே அப்போது பிரபலமாக இருந்த நடிகை லதா தான். அதேபோன்று முன்னாள் முதலமைச்சர் மற்றும் நடிகையான ஜெயலலிதாவை உள்ளே கொண்டு வந்து அவருடைய சினிமா பிரபலம் மூலம் கட்சியை மக்களிடையே கொண்டு சென்றார் எம் ஜி ஆர்.

இந்த திட்டத்தை தான் தற்போது தளபதி விஜய்யும் செயல்படுத்த இருக்கிறார். கிட்டத்தட்ட 15 வருடங்களுக்குப் பிறகு த்ரிஷாவை அவருடன் ஜோடி சேர்த்ததே அரசியல் திட்டத்திற்காக தான் என்று சொல்கிறார்கள். இருந்தாலும் விஜய்க்கு இன்னொரு பிளானும் இருக்கிறது. அடுத்து அவர் நடிக்க இருக்கும் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கு வாய்ப்பு வழங்க இருக்கிறார்.

நயன்தாராவிற்கு தமிழகத்தில் ரசிகர்கள் கூட்டம் என்று தனியாக உண்டு. ஆரம்ப காலங்களில் இவருக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் இருந்தாலும் தற்போது பெண்களும் அதிகமாக நயன்தாராவை ஆதரிக்கிறார்கள். இதனால் தன்னுடைய அரசியல் திட்டத்திற்கு நயன்தாராவை கட்சிக்குள் கொண்டு வரும் எண்ணம் தளபதி விஜய்க்கு இருக்கிறது.

மேலும் நயன்தாரா மற்றும் திரிஷா இருவரையுமே தளபதி விஜய் தன்னுடைய அரசியல் பணிக்கு பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது. விஜய் மக்கள் இயக்கம் தொடங்கும் பொழுது அந்தக் கட்சி கொடியை அறிமுகப்படுத்தியவர் நடிகை நயன்தாரா தான். நயன்தாராவை வைத்து அரசியலில் திட்டம் போடும் பிளான் அப்போதே விஜய்க்கு இருந்திருக்கிறது என்பது நன்றாக தெரிகிறது.

ஆக, அடுத்த எம்.ஜி.ஆராக விஜய் உருவெடுப்பாரா என்பதை காலம்தான் பதில் சொல்லும்…?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal