திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமை தொகை மாதந்தோறும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. கடந்த பட்ஜெட்டிலும் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை. பொருளாதார ரீதியாக அரசுக்கு இருக்கும் சில சிக்கலால் இந்த திட்டம் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை.

திமுகவின் இந்த தேர்தல் வாக்குறுதி பல்வேறு காரணங்களுக்காக இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. முக்கியமாக தமிழ்நாடு அரசின் பொருளாதாரம் சரியாகவில்லை என்ற காரணத்திற்காக இந்த திட்டம் தொடங்கப்படாமல் உள்ளது.

இந்த உரிமைத் தொகை ஏழ்மையான குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே அளிக்கப்படும் என்றும் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். நான் கொடுத்த வாக்குறுதியில் இருந்து மாற மாட்டேன். கண்டிப்பாக எனது வாக்குறுதியை நிறைவேற்றுவேன். மக்களுக்கு கண்டிப்பாக மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும். இதில் மாற்றம் இருக்காது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில்தான் சில மாற்றங்களுடன் இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்று தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இந்த திட்டம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஈரோட்டில் பிரச்சாரம் செய்யும் போது பேசினார்.

அவர் தனது பிரச்சாரத்தில், 21 மாத திமுக ஆட்சியில் பல நலத்திட்டங்களை செய்து இருக்கிறோம். இரண்டாவது அலை கொரோனா ஏற்பட்ட போது 2.14 லட்சம் குடும்பங்களுக்கு தலா 4000 ரூபாய் வழங்கினோம். ஆவின் விலை லிட்டருக்கு ரூபாய் 3 குறைத்தோம். அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பேருந்து பயணம் மூலம் பெண்கள் 222 பயணங்களை இலவசமாக. ஈரோட்டில் மட்டும் 11 கோடி பேர் இந்த பயணத்தை மேற்கொண்டு உள்ளனர். உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது. குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 எப்போது வழங்கப்படும் என்று நீங்கள் கேட்பது கேட்கிறது. விரைவில் அதை கொடுப்போம். ஈரோடு இடைத்தேர்தலுக்கு பின் 5-6 மாதங்களில் கண்டிப்பாக கொடுப்போம். நான் உறுதி அளிக்கிறேன்.

இந்த திட்டத்தை செயல்படுத்த ஆண்டுக்கு 25800 கோடி ரூபாய் செலவு ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2.15 கோடி ரேஷன் அட்டை உள்ளது. இதில் அனைத்திலும் குடும்ப தலைவிகளுக்கு பணம் கொடுப்பது இயலாத காரியம். இதனால் அரசுக்கு பெரிய அளவில் சுமை ஏற்படும். அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்தம் நபர்கள், சொந்த வீடு வைத்து இருப்பவர்கள் ஆகியோருக்கு இந்த உரிமைத்தொகை அளிக்கப்படாது என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் PHH-AYY, PHH, NPHH ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே நிதி அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.NPHH -S, NPHH – NS ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த உரிமைத்தொகை அளிக்கப்படாது என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தொடங்க உள்ளன. ஏற்கனவே பெண்களுக்கு அளிக்கப்படும் கட்டணமில்லா பேருந்து காரணமாக பெண்கள் இடையே திமுகவிற்கு மதிப்பு உள்ளது. தற்போது இந்த திட்டத்தையும் செயல்படுத்தி பெண்களை மொத்தமாக கவரும் விதமாக திட்டத்தை ஆரம்பிக்க அரசு முடிவு செய்துள்ளது.

பாராளுமன்றத் தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கு முன் திட்டத்தை கொண்டு வந்தால் அரசியல் ரீதியாகவும் பெரிய அளவில் அது பலன் அளிக்கும் என்று திமுக தரப்பு நினைக்கிறதாம்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal