உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை நாளை நவம்பர் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில்தான் இளைஞரணி மாநில துணைச் செயலாளர் எஸ்.ஜோயலின் கைவண்ணத்தில் எழுதி பாடல் வெளியீட்டு விழா அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.

‘‘உதயா அண்ணன் வாராரு…’’ என்ற தலைப்பில் எஸ்.ஜோயல் எழுதியிருக்கும் பாடல் வரிகள் தி.மு.க. உடன் பிறப்புக்களை உற்சாகத் துள்ளல் ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு வரிகளும் அமைந்திருக்கிறது.
அந்த வரிகளைப் பார்ப்போம்… –
பல்லவி
உதயா அண்ணன் வாராரு
எதிரி நடுங்கிட
தமிழ் நாட்டை ஆள வாராரு
தமிழன் நிமிர்ந்திட…
வீரனாய் தீரனாய்
சீறி வருகிறார்ஞ்
கலைஞராய் தலைவராய்
களத்தில் நிற்கிறார்…
பகை வீழ வாள் ஏந்தும்
கழகத்தின் போராளிடா
வரலாறு பேர் சொல்லும்
இனம் காக்கும்
என் அண்ணன் டா…

சரணம்: 1
விழ விழ எழுவோம்
வீர்கொண்ட வேங்கையடா
தீயோரை வீழ்த்தி இங்கே
துயரம் துடைப்போம் எழுடா…
பிஞ்சுக் குழந்தை நெஞ்சில்
நஞ்சைக் கலந்து விட்ட
கொடியவன் கதையை
நொடியில் முடிப்போம் எழுடா…
இளைய தலைமுறைக்காய்
இதயம் துடிப்பவன் டா
உதயநிதி போல் இங்கே
உழைப்பவன் எவன்டா…
ஏழைக்காக நாளும்
அள்ளி கொடுப்பவன்டாஞ்
ஏமாற்றும் கூட்டத்திற்கு
எரிமலை இவன் டா…
தலைவர் முழக்கம்
திராவிட முன்னேற்றக் கழகத்தை
எந்தக் கொம்பனாலும்
தொட்டுக் கூட பார்க்க முடியாது.
சரணம்: 2
தில்லான திமுக டா
தீரர்கள் கோட்டமடா
ஆணவத் திமிரை
அடக்கி அறுப்போம் எழுடா…
கடலை குடிக்க இங்கே
கழகம் அழிக்க இங்கே
பிறந்தவன் எவன்டா
கோட்டையை பிடிப்போம் பாரடா…
கொள்கை கொடி பிடித்து
கொடுங்கோல் பறித்தெறிந்து
இருட்டை விரட்டுகிற
இளைய சூரியன்டா…
காலம் மாறுமடா
கழகம் வெல்லுமடா
நாட்டை ஆளுவாறு
நம்ம தலைவர்டா…’’ என்பதுதான்!
பாடல் வெளியீட்டு நிகழ்வின் போது மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தவிர, வந்திருந்த அனைவருக்கும் பிரியானியும் வழங்கப்பட்டது.
கடந்த நான்கு வருடங்களாக தொடர்ச்சியாக உதயநிதி அவர்களின் பிறந்தநாளையொட்டி ‘எழுச்சி பாடல்’ வெளியீட்டு விழா நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார் எஸ்.ஜோயல்!

தி.மு.க.வைப் பொறுத்தளவில் கலைஞருக்கு எப்படி எழுச்சிப் பாடல்கள் உணர்ச்சிப் பொங்க, உடன்பிறப்புக்களை தட்டி எழுப்பும் பாடல்களாக இருந்ததோ? அதே போல் இளைஞரணியின் எழுச்சி நாயகன், திராவிட இயக்கத்தின் எங்கள் எதிர்காலமான உதயநிதிக்கும் எழுச்சிப் பாடல்கள் மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது.
தி.மு.க.வின் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களில் உதயநிதிக்காக பாடப்படும் எழுச்சிப் பாடல்கள் உடன்பிறப்புக்களை வெகுவாக கவர்ந்திருப்பதோடு, பொதுமக்களையும் சிந்திக்கத் தூண்டும் வகையில் அமைந்திருக்கிறது. இதற்கான முயற்சிகளை எஸ்.ஜோயல் தொடர்ந்து எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது!
