திண்டுக்கல் அருகே 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கணவனுக்கு மனைவி உடந்தையாக இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே திருவள்ளுவர் நகரில் வசித்து வருபவர் பிரகாஷ். கூலித்தொழிலாளியான இவருக்கு கவுரி என்ற மனைவியும் 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் வாடகை வீட்டில் வசித்து வரும் நிலையில், அந்த வீட்டின் உரிமையாளர் மல்லிகாவின் வீட்டிற்கு அவரது உறவினர் கீர்த்திகா என்பவர் வந்துபோவது வழக்கமாக இருந்து வந்துள்ளது.

மேலும், கீர்த்திகாவுக்கு குழந்தை இல்லாததால் கவுரியின் 4 வயது மகளுடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில், குழந்தையை தங்களுடன் ஊரான திண்டுக்கல்லுக்கு அழைத்து சென்றுவிட்டு சில நாட்களுக்கு பிறகு திரும்ப கூட்டிவந்து விடுவதாக கீர்த்திகா கேட்டுள்ளார்.

கவுரியும் தனது மகளை கீர்த்திகாவுடன் அனுப்பி வைத்த நிலையில், சில நாட்களிலேயே மகள் வழுக்கி விழுந்து காயமடைந்ததாக கூறி கீர்த்திகா கவுரியிடம் கூறியுள்ளார். இதை அடுத்து சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்த போது சிறுமியை சோதித்த மருத்துவர்கள் சிறுமியின் உடலில் தீக்காயங்கள் இருப்பதாக கூறப்பட்டது.

மேலும், சிறுமிக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதை அறிந்து சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் அங்கு வந்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

விசாரணையில், சிறுமியை தன்னுடன் செங்குளத்துபட்டிக்கு அழைத்துச் சென்ற கீர்த்திகா, தனது கணவன் ராஜேஷ்குமாருடன் சேர்ந்து சிறுமியை கொடுமை செய்துள்ளார். மேலும், உடல்களில் சூடு வைத்துள்ளார். மேலும், சிறுமியை கீழே தள்ளி தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் தான் மருத்துவமனையில் அனுமதித்து உயிரிழந்தாக கூறினர்.

இதற்கிடையே, சிறுமியின் உடற்கூராய்வில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததால் உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், கீர்த்திகாவையும் அவரது கணவர் ராஜேஷ்குமாரையும் கைது தீவிர விசாரணை மேற்கொண்டதில் ராஜேஷ்குமார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததையும், அதற்கு அவரது மனைவி கீர்த்திகா உடந்தையாக இருந்ததையும் ஒப்புக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ்குமார், கீர்த்திகா ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal