ஆபாச படம் பார்க்க ஆசைப்பட்டு, மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் பணத்தை இழந்த சம்பவம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மும்பையில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் செய்துவரும் 83 வயது தொழிலதிபர் ஒருவர், கடந்த செவ்வாய்கிழமை பந்த்ரா காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் கடந்த அக்டோபர் மாதம் 29-ந் தேதி நள்ளிரவு வேளையில் ஆபாச படம் பார்க்க ஆசைப்பட்டு தனது கணினியில் அது தொடர்பான வெப்சைட் ஒன்றிற்கு சென்றாராம்.

அப்போது அந்த வெப் சைட்டில் ஒரு வார்னிங் மெசேஜ் வந்துள்ளது. அதில் ஆபாச படம் பார்ப்பது சட்டவிரோதமானது என்றும் அதையும் மீறி பார்த்தால் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்ததாம். அதுமட்டுமின்றி ஒருநாளுக்குள் ரூ.29 ஆயிரம் செலுத்தினால் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முடியும் என்றும் அந்த வார்னிங் மெசேஜில் தெரிவிக்கப்பட்டு இருந்ததாம்.

இதைப்பார்த்து பதறிப்போன அந்த தொழிலதிபர், கைது நடவடிக்கைக்கு பயந்து அந்த அபராத தொகையை செலுத்த முடிவு செய்து, தனது ஏடிஎம் கார்டு மூலம் ஆன்லைனில் ரூ.32 ஆயிரத்தை செலுத்தி உள்ளார். பின்னர் அவர் தனது வங்கிக் கணக்கு விவரங்களை பார்த்த பிறகு தான் அந்த தொகை போலீசுக்கு போகவில்லை என தெரியவந்துள்ளது.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், உடனடியாக பந்த்ரா காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்து போலீசாரிடம் நடந்ததை கூறி உள்ளார். அவரது புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கின் விவரங்களை வாங்கி அதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 83 வயதில் ஆபாச படம் பார்க்க ஆசைப்பட்டு தொழிலதிபர் ஒருவர் பணத்தை இழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal