தமிழக சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த்தைப் போலவே, அச்சு அசலாக பாகிஸ்தானில் ஒரு ‘ரஜினிகாந்த்’ இருப்பதுதான் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பாகிஸ்தானில் தாசில்தாரராக பணியாற்றி ஓய்வுபெற்ற ரெஹ்மத் கஷ்கோரியை பார்க்கும் இந்தியர்கள் யார் ஒருவரும் ஒரு நிமிடம் திகைத்துத்தான் போவார்கள். பாகிஸ்தானில் தாசில்தாரராக பணியாற்றி ஓய்வுபெற்ற ரெஹ்மத் கஷ்கோரியை பார்க்கும் இந்தியர்கள் யார் ஒருவரும் ஒரு நிமிடம் திகைத்துத்தான் போவார்கள்.

காரணம் அவர் நமது திரைப்பட நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போல அச்சு அசலாக இருப்பதுதான். நடிகர் ரஜினிகாந்தின் ஸ்டைல் மற்றும் அவரது பேச்சுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தற்போது 70 வயதை நெருங்கினாலும் அவர் திரையுலகில் பிஸியான நடிகராகவே உள்ளார். தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்தும் வருகிறார்.

இந்த திரைப்படத்தின் 50 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்துவிட்டன. இப்படத்தைத் தொடர்ந்து லைகா நிறுவனத்தின் கீழ் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார். எனவே அவர் 2023 முழுவதும் பிஸியாகவே இருப்பார். இப்போது, ரஜினிகாந்த் பற்றியல்ல செய்தி..

அவரைப் போலவே பாகிஸ்தானில் இருக்கும் ஓய்வுபெற்ற தாசில்தாரரைப் பற்றித்தான். பாகிஸ்தானில் இருக்கும் இந்த ரெஹ்மத் கஷ்கோரி, ரஜினிகாந்த் போல இருப்பது குறித்து சமூக வலைத்தளங்களில் தற்போது புகைப்படங்களும் விடியோக்களும் பகிரப்பட்டு வருகின்றன.

இது பற்றி தெரிந்து கொண்ட ரெஹ்மத்தும், ரஜினிகாந்த் செய்யும் ஸ்டைல்களை செய்து அசத்தி வருகிறாராம். Thalaivar Craze in Pakistan.. Superstar #Rajinikanth pic.twitter.com/sX1cAAdutR – Laxmi Kanth (@iammoviebuff005) November 2, 2022 பாகிஸ்தான் தொலைக்காட்சி ஊடகங்கள் பலவும் ரெஹ்மத்தை பேட்டி எடுத்து வெளியிட்டு வருகின்றன.

அவர் அளித்த பேட்டி ஒன்றில், ‘‘தான் ரஜினிகாந்த் போல இருப்பதாக பலரும் கூறுகிறார்கள். எனக்கு ஒரே ஒரு ஆசைதான், அவரை ஒரு முறையாவது நேரில் பார்த்துவிட வேண்டும்’’ என்று கூறியிருக்கிறாராம்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal