காதலனுடன் இணைந்து கணவரின் ஆணுறுப்பை அறுத்து மனைவி கொலை செய்த சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆந்திராவின் இந்துபூரை சேர்ந்த தம்பதி ஸ்வேதா மற்றும் சந்துரு. இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து உள்ளது.

இதில் சந்துருவை விட ஸ்வேதா 18 வயது இளையவர். இருப்பினும், வீட்டுப் பெரியவர்கள் வலியுறுத்தியதால் திருமணத்திற்கு இஷ்டமின்றி சந்துருவை ஸ்வேதா திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

திருமணம் நடந்த உடனேயே சந்துரு பெங்களூர் வந்துவிட்டார். அதேநேரம் ஸ்வேதா இந்துபூரிலேயே வசித்து வந்துள்ளார். ஸ்வேதா கல்லூரியில் படிக்கும் போது சுரேஷ் என்ற நபரைக் காதலித்து வந்துள்ளார். பிடிக்காத நபரைத் திருமணம் செய்து கொண்டதால், திருமணத்திற்குப் பின்னரும் கூட சுரேஷுடன் தொடர்ந்து பழகி வந்து உள்ளார். அதேபோல ஸ்வேதாவின் உறவினரான லோகேஷ் என்பவரும் அந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

காதலிக்கிறேன் என்ற பெயரில் ஸ்வேதாவை பின்தொடர்ந்து டார்சர் செய்துள்ளார். இது குறித்து ஸ்வேதாவின் கணவர் சந்துரு ஏற்கனவே அங்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். இதையடுத்து சமாதானப்படுத்த நடைபெற்ற மீட்டிங் போது, போலீசார் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையிலேயே லோகேஷை செருப்பால் அடித்துள்ளார். இந்தச் சம்பவத்திற்குப் பின், ஸ்வேதாவை சந்துரு பெங்களூருக்கு தன்னுடன் அழைத்து வந்துவிட்டார்.

இருப்பினும், அவரது கல்லூரி காதலன் சுரேஷ் தொடர்ச்சியாக ஸ்வேதாவுக்கு மெசேஜ் அனுப்பி வந்துள்ளார். கணவர் இருப்பதால் காதலன் சுரேஷ் உடன் தொடர்பில் இருக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்ட ஸ்வேதா, கணவரைக் கொலை செய்யத் திட்டமிட்டு, இதைத் தனது காதலன் சுரேஷுக்கு கூறியுள்ளார். இதையடுத்து கடந்த அக். 21ஆம் தேதி பேச வேண்டும் எனக் கூறி கணவர் சந்துருவை ஸ்வேதா மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு மறைந்து இருந்த சுரேஷ் அவரை தாக்கத் தொடங்கினார். கணவரை அடித்தே கொல்ல தனது காதலனுக்கு மரக்கட்டைகளை எடுத்துத் தந்துள்ளார் ஸ்வேதா. மேலும், காதலனிடம் ஒரு கத்தியைக் கொடுத்த தனது கணவரின் அந்தரங்க உறுப்பை வெட்டும்படியும் கூறியுள்ளார். இந்த கொடூர தாக்குதலில் சந்துரு உயிரிழந்தார். இந்தச் சம்பவத்திற்குப் பின் சத்தமின்றி வீட்டிற்கு வந்துவிட்ட ஸ்வேதா தனது கணவர் இன்னும் வீடு திரும்பவில்லை என்றே கூறியுள்ளார்.

நீண்ட நேரமாகியும் சந்துரு வீடு திரும்பாததால், அக்கம் பக்கத்தில் அவரை தேடிய குடும்பத்தினர், ​​மொட்டை மாடியில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரது உடல் யெலஹங்கா அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஒரு பக்கம் போலீசார் தங்கள் விசாரணையைத் தொடங்கிய போதிலும், ஸ்வேதா தொடர்ந்து தனது நடிப்பைத் தொடர்ந்து உள்ளார். தனக்கு எதுவும் தெரியாது என்றே தொடர்ந்து வந்துள்ளார்.

இருந்த போதிலும் விசாரணையின் போது ஸ்வேதா தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். விசாரணை தொடங்கிய உடன் தனக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்றும் ​​லோகேஷ் தான் இதற்குக் காரணம் என்றும் முதலில் பழி போட முயன்றுள்ளார். அதாவது ​​லோகேஷ் தன்னை மீண்டும் தொடர்பு கொண்டு டார்ச்சர் செய்வதாகவும் இதனால் அவர் இதைச் செய்து இருக்கலாம் எனக் கூறியுள்ளார்.

இருப்பினும், போலீசார் நடத்திய விசாரணையில் அது பொய்யான தகவல் என்பது தெரிய வந்துள்ளது. சுரேஷ் மொபைலை ஆய்வு செய்ததில் அவர் கொலை நடந்த நாளில் ஸ்வேதா 20 முறை சுரேஷுக்கு போன் செய்ததை போலீசார் கண்டறிந்தனர். மேலும், தனது இருப்பிட விவரங்களையும் ஸ்வேதா சுரேஷுக்கு அனுப்பியுள்ளார். இதையடுத்து சுரேஷ் மற்றும் ஸ்வேதாவை கைது செய்த போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal