அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ள தமிழக சட்டசபை மழைக்கால கூட்டத் தொடர் தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை தலைமை செயலகத்தில், இன்று காலை, 9:30 மணிக்கு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர், அக்டோபர் 2வது வாரம் நடைபெற உள்ளது. 4 நாட்கள் இக்கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட உள்ள ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டம் உள்ளிட்ட சட்ட மசோதாக்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், புதிய தொழில் முதலீடுகளுக்கான அனுமதி மற்றும் சலுகைகள் வழங்குவது குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal