தந்தைக்கு சாராய பாக்கெட் கொடுத்துவிட்டு, மகளுடன் உல்லாசமாக இருந்த இரு வாலிபர்கள் இருந்துள்ளனர். விஷயம் தெரிந்தவுடன் அப்பெண் தூக்கில் தற்கொலை செய்துகொள்ள, இருவரும் தற்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கந்தாடு கிராமத்தை சேர்ந்தவர் பிரதாப் (வயது 22). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. மாணவியின் தந்தைக்கு குடிப்பழக்கம் உண்டு.

இதனை அறிந்த பிரதாப் புதுவையில் இருந்து பாக்கெட் சாராயம் வாங்கி வருவார். இதனை மாணவியின் தந்தைக்கு கொடுத்து விடுவார். பாக்கெட் சாராயத்தை குடிக்கும் மாணவியின் தந்தை சிறிது நேரத்தில் மயங்கி விடுவார். அப்போது பிரதாப் அந்த மாணவியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தார். இந்த நிலை தொடர்ந்து நீடித்தது. இந்த விஷயம் பிரதாப்பின் நண்பர் களிக்குப்பத்தை சேர்ந்த புவனேஸ் (21) என்பவருக்கு தெரியவந்தது. அவரும் அந்த மாணவியிடம் நைசாக பேச்சு கொடுத்து வந்தார். புவனேசின் ஆறுதல் பேச்சில் அந்த மாணவி சொக்கிப்போனார். நாளடைவில் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது.

ஆனால், புவனேஸ் அந்த மாணவியை எப்படியாவது அடைந்தே தீர வேண்டும் என்று கங்கணம் கட்டி வந்தார். அதன்படி சம்பவத்தன்று புவனேஸ் சாராய பாக்கெட் வாங்கி வந்து மாணவியின் தந்தைக்கு கொடுத்துள்ளார். இதில் அவர் மயங்கினார். அதன் பின்னர் அந்த மாணவியை புவனேஸ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த சில நாட்களாக அடிக்கடி தனித்தனியாக 2 வாலிபர்கள் வந்து சென்றதை கிராம மக்கள் பார்த்துள்ளனர். இந்த விஷயம் ஊருக்குள் தெரிய வந்தது.

இதனால் மனம் உடைந்த அந்த மாணவி நேற்று இரவு வீட்டில் துப்பட்டாவால் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போதை தெளிந்து எழுந்த மாணவியின் தந்தை தனது மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மரக்காணம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது.

மாணவி ஏழை குடும்பத்தை சேர்ந்தவர். தாயை இழந்த இவர் தந்தையுடன் வசித்து வந்தார். மாணவி பயன்படுத்திய செல்போன் போலீசிடம் சிக்கியது. அதில் பேசியுள்ள நபர்கள் குறித்து துப்பு துலக்கிய போது புவனேஸ், பிரதாப் ஆகியோர் அடிக்கடி பேசியுள்ளது தெரியவந்தது. இதன் மூலம் போலீசார் 2 பேரையும் விசாரணை செய்து அவர்களை கைது செய்தனர்.

தொடர்ந்து நடந்த விசாரணையில் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களையும் போலீசார் தேடிவருகிறார்கள்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal