தமிழகத்தில் காதல் ஜோடிகளை மிரட்டி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த நபர் அந்த பணத்தை எவ்வாறெல்லாம் செலவழித்தார் என்பது குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டை காவல் எல்லையில், கடந்த 16ம் திகதி இரவு 400 அடி பைபாஸ் சர்வீஸ் ரோட்டில் இளம் ஜோடி காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் தன்னை பொலிஸ் என கூறி, சாலையில் தனியாக காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை சிசிடிவி மூலம் காவல் ஆய்வாளர் உங்களை கண்காணித்து கொண்டிருக்கிறார் எனக்கூறி, காரில் இருந்த இளம்ஜோடியிடம் செல்போன் மற்றும் 4 சவரன் தங்க நகைகளை மிரட்டி பறித்து சென்றார்.
இது தொடர்பான புகாரின் பேரில் பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது தமிழகம் முழுவதும் பொலிஸ் எனக் கூறி இதுபோன்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் சிவராமன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து பொலிசார் பூந்தமல்லி பைபாஸ் சாலையில் சிவராமனை விரட்டிச் சென்று கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தில், ‘‘பல காதல் ஜோடிகளை மிரட்டி பணம், நகைகளை பறித்துள்ளேன்.
எனக்கு சிறு வயதில் இருந்து நடிகைகள் என்றால் மிகவும் பிடிக்கும். இதனால் பல லட்சம் செலவு செய்து நட்சத்திர ஹோட்டல்களில் அறை எடுத்து, தரகர்கள் மூலம் சின்னத்திரை நடிகைகளுடன் தனிமையில் இருப்பேன். இதுவரை முன்னணி சின்னத்திரை நடிகைகள் மற்றும் நிகழ்ச்சி தொப்பாளிகளுக்கு ரூ.40 முதல் ரூ.50 லட்சம் வரை செலவு செய்துள்ளேன்.
பெரும்பாலான பணத்தை நடிகைகளுக்கு தான் செலவு செய்துள்ளேன். அதிகளவில் 4 எழுத்து கொண்ட கொண்ட நிகழ்ச்சி தொகுப்பாளிக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.40 ஆயிரமும், 5 எழுத்து கொண்ட தொகுப்பாளிக்கு ரூ.50 ஆயிரம் என ரூ.1 லட்சம் வரை ஒரு மணி நேரத்திற்கு கொடுத்து அவர்களுடன் தனிமையில் இருந்து வந்துள்ளேன்.
நான் கருப்பாக இருப்பதால் சிறு வயதில் எந்த பெண்களும் என்னை பார்க்க மாட்டார்கள். ஆனால் பணம் இருந்தால் போதும், அழகு தேவையில்லை என்று சின்னத்திரை நடிகைகள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளிகள் மூலம் நான் தெரிந்து கொண்டேன்’’ என கூறியுள்ளார்.
இதனிடையில் சிவராமன் கொடுத்த நடிகைகள் பட்டியலை பார்த்து போலீசார் வியப்பிலும், அதிர்ச்சியிலும் உறைந்துள்ளனர். அந்த ஆதாரங்கள் அடிப்படையில் 10 நடிகைகளிடம் விசாரணை நடத்தவுள்ளனர்.