அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டவுடன், ஓ.பி.எஸ். அணியினர் சோகத்துடன் காணப்பட்டனர்.

அதன் பிறகு, எடப்பாடி தரப்பினரை துரத்தும் வருமான வரித்துறையினர், சி.பி.ஐ. வழக்கு, எடப்பாடி மீது டெண்டர் ஊழல் வழக்கு என அடுத்தடுத்து அந்த தரப்பினர் மீது வழக்குகள் தலைக்கு மேல் கத்தியாக தொங்கிக்கொண்டிருக்கும் நிலையில், ஓ.பி.எஸ். தரப்பினர் தற்போது உற்சாகத்தில் உள்ளனர்!

சமீபத்தில் 14 மாவட்டச் செயலாளர்களை புதிதாக நியமித்தார் ஓ.பி.எஸ். அடுத்த அதிரடியாக இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்களை நியமித்தார் ஓ.பி.எஸ். மேலும் சில நிர்வாகிகள் நியமனம் குறித்து ஆலோசனை நடந்து வருகிறது!

இந்த நிலையில்தான் திருச்சி மாவட்டம் துறையூர் அ.தி.மு.க. மகளிர் அணியைச் சேர்ந்த பத்மாவதி தலைமையில், சுமார் 500&க்கும் மேற்பட்ட பெண்கள் ஓ.பி.எஸ்.ஸை சந்தித்து, அவருக்கு ஆதரவு தெரிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதே போல் மற்ற மாவட்டங்களில் இருந்தும் ஓ.பி.எஸ்.ஸுக்கு ஆதரவு தெரிவிக்க தயாராகி வருகிறார்களாம்!

இது பற்றி துறையூர் பத்மாவதிக்கு நெருக்கமானவர்கள் சிலரிடம் பேசினோம், ‘‘சார், அம்மா இருக்கும்போது எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி கட்சிப் பணியாற்றி வந்தோம். தற்போதுகூட பதவி இருக்கிறதோ… இல்லையோ… வீடு வீடாக சென்று வாக்குகேட்பது முதல்… கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறோம்.

இப்படி நாங்கள் உழைத்து, உழைத்து கட்சிப் பணியாற்றினாலும் எங்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க மறுக்கப்படுகிறது. எனவேதான். நாங்கள் அக்கா பத்மாவதி த¬லைமையில் ஓ.பி.எஸ். அணியில் இணைய முடிவெடுத்திருக்கிறோம். இன்னும் ஓரிரு நாட்களில் ஐயா ஓ–.பி.எஸ்.ஸை சந்தித்து அவரது தலைமையின் கீழ் பணியாற்ற இருக்கிறோம்’’ என்றனர்!

எந்த முடிவாக இருந்தாலும், நல்ல முடிவாக இருந்தால் சரிதான்..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal