அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, தனக்கு பதவி கிடைக்கவில்லை என்பதால் முடக்கும் முயற்சியில் இறங்கினார் ஓ.பி.எஸ்., அதாவது, சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க. ஆட்சி கவிழுவதற்கு தி.மு.க.வுடன் கைகோர்த்தார்.

அடுத்தது நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை ‘மேலிட’ உதவியுடன் இரட்டை இலை சின்னத்தை முடக்கினார். அதன் பிறகு தனக்கு ‘பசையுள்ள’ துணை முதல்வர், வீட்டு வசதி வாரிய அமைச்சரான பிறகு நிம்மதி அடைந்தார். தற்போது, அ.தி.மு.க.,வின் 7 வங்கிக்கணக்குகளை முடக்க வேண்டும் என சென்னை மண்டல ரிசர்வ் வங்கி இயக்குநருக்கு பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வானார். அவர், கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். கட்சியின் புதிய பொருளாளராக முன்னாள் அமைச்சர் சீனிவாசன் நியமிக்கப்பட்டார். அவர் கட்சி வங்கிகணக்குகளை கவனிப்பார் என இம்மாதம் 12ம் தேதி அ.தி.மு.க., கணக்கு வைத்துள்ள வங்கி மேலாளர்களுக்கு பழனிசாமி கடிதம் அனுப்பினார்.

அதேநேரம், அதை ஏற்கக்கூடாது என பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பினார். அதேநேரத்தில் பழனிசாமி தரப்பில் வழங்கப்பட்ட ஆவணங்களை சரி பார்த்த வங்கி நிர்வாகம், பழனிசாமி கடிதத்தை ஏற்று கொண்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குநருக்கு பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்தில், ‘‘அ.தி.மு.க.,வின் 7 வங்கிக்கணக்குகளை முடக்க வேண்டும். அதிமுக தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது. தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் வரை தான் தான் அதிமுக பொருளாளர். பொதுக்குழு குறித்து தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் வரை கரூர் வைஸ்யா, எஸ்பிஐ இந்தியன் வங்கி உள்ளிட்ட 7 கணக்குகளில் பணப்பரிவர்த்தனையை நிறுத்த வேண்டும்’’ எனக்கூறியுள்ளார்.

இதற்டையே, பாராளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லாவிற்கு எழுதிய கடிதத்தில், ‘‘லோக்சபா எம்.பி., ரவீந்திரநாத்தை அ.தி.மு.க., உறுப்பினராக கருத வேண்டாம் என்ற பழனிசாமி கடிதத்தை நிராகரிக்க வேண்டும். அவரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை ஏற்கக்கூடாது’’ இவ்வாறு அந்த கடிதத்தில் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

ஓ.பன்னீர் செல்வம் என்ற தனி நபருக்காக அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை முடக்க முயற்சிக்கிறார்…. ‘‘அ.தி.மு.க.வில் இத்தனை பதவி சுகங்களை வகித்துவிட்டு, இன்றைக்கு தன்னை வளர்த்துவிட்ட இயக்கத்தையே ஓ.பி.எஸ். முடக்க முயற்சிக்கிறாரே?’’ என்று உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் ரத்தக் கண்ணீர் வடிக்கின்றனர்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal