சென்னையில் உள்ள அதிமுக., தலைமை அலுவலகத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோருடன் பன்னீர்செல்வம், பழனிசாமி ஆலோசனை நடத்தி கொண்டிருந்த நிலையில், ஒற்றை தலைமை கோரி பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி ஆதரவாளர்கள் மாறி மாறி கோஷம் போட்டனர்.
அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் வரும் 23ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. அதில், நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் என மொத்தம் 152 பேர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போது, கட்சி அலுவலகத்திற்கு வெளியே கூடியிருந்த தொண்டர்கள் ஒற்றை தலைமை வேண்டும் எனக்கூறி கோஷம் போட்டனர். பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோரது ஆதரவாளர்கள் மாறி மாறி கோஷம் போட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
