தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு, கஞ்சா விற்பனையை தடை செய்வதற்கு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், தென்மாவட்டங்களில் கஞ்சா விற்பனை செய்ததாக பதியப்பட்ட 494 வழக்குகளில் தொடர்பு உடையவர்களின் 813 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தென் மண்டல போலீஸ் ஐஜி அஸ்ரா கார்க் கூறியுள்ளார்.

மேலும் அவர், ‘‘கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 90 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கஞ்சா விற்பனை குற்றவாளிகள் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்களின் அசையும் அசையா சொத்துகள் முடக்கப்படும். விருதுநகரில் 76 வழக்குகளில் 119 பேரின் சொத்துகளும், தேனியில் 81 வழக்குகளில் தொடர்புடைய 116 பேரின் சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன’’ இவ்வாறு அவர் கூறினார்.

இதனால் கஞ்சா வியாபாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்! இனியாவது கஞசா வியாபாரம் குறைந்தால் நல்லதுதான்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal