காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை பார்த்து விட்டு, படம் பற்றிய விமர்சனம் செய்தவர்களை விட, நயன்தாரா ஏன் ‘ஒல்லி’யாக இருக்கிறாரே என கேட்டவர்கள் தான் அதிகம். அதுவும் நயன் ரசிகர்களும், சமந்¬தாவை பார்த்து ஜொல்லிவிட ஆரம்பித்துவிட்டனர். அந்தளவிற்கு சமந்தா மெருகேறி இருக்கிறார்!

விக்னேஷ் சிவன் இயக்கிய காத்துவாக்குல ரெண்டு காதல் படம் இன்று தியேட்டர்களில் ரிலீசானது. விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள இந்த படம் 2022 ம் ஆண்டில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருந்தது.

தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகைகளாக இருக்கும் நயன்தாரா, – சமந்தா இணைந்து நடிக்கிறார்கள் என்பது இந்த படத்திற்கு மற்றொரு பலமாக பார்க்கப்பட்டது. இதுவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. படத்தில் முதலில் சமந்தா பற்றிய இன்ட்ரோ தான் காட்டப்பட்டிருக்கும்.

முதலில் வரும் சமந்தா செம கிளாமரான உடைகளில் வருவார். ‘‘யப்பப்பா…?’ என ரசிகர்கள் வாய் பிளக்கும் அளவிற்கு இருக்கும். அடுத்த சீனிலேயே நயன்தாராவை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி விட்டனர். அந்த அளவில் ரொம்பவே மெலிந்து டல்லடித்து காணப்படுகிறார். அண்ணாத்த படத்தில் இருந்ததை விடவும் உடல் மெலிந்து காணப்படுகிறார். இதனால் ரசிகர்கள், ஏன் என்னாச்சு நயன்தாராவுக்கு. ஏன் இப்படி ஆகி விட்டார். அவரின் சமீபத்தில் போட்டோக்களில் இருந்ததை விட இதில் மோசமாக இருக்கிறாரே என கேட்டு வருகின்றனர்.

இது பற்றி கோலிவுட் வட்டாரத்தில் பேசியபோது, ‘‘நயன்தாராவின் மார்க்கெட் வால்யூ முன்பை விட தற்போது கொஞ்சம் குறைந்து விட்டதாகவே சொல்லப்படுகிறது. இதற்கு காரணம் அவரது தோற்றத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம்தான். நயன்தாராவை விட வயதான நடிகைகள் கூட இளமை தோற்றத்திற்கு மாறி வரும் நிலையில், நயன்தாரா (உடல் எடையை குறைக்கிறேன் என்று) இப்போது வயதானது போன்ற தோற்றத்திற்கு மாறி விட்டாரே!’’ என்றனர்.

சினிமா உலகைப் பொறுத்தவரை, உடலையும், அழகையும் அடிக்கடி மற்றுவது ஒன்றும் புததல்ல… அப்படி நயன்தாரா மீண்டும் பழைய நயன்தாராவாக வருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal