தமிழக அரசு, மாநிலம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளில் சத்துணவு வழங்கப்படும் முறையில் தொடர் கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என ஜிகே வாசன் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘‘திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 7 மாணவ, மாணவியரின் உடல்நலன் பாதிக்கப்பட்டது வேதனைக்குரியது. அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவுத் திட்டமானது மிகவும் முக்கியமானது, அவசியமானது.

குறிப்பாக தமிழக அரசு, மாநிலம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளில் சத்துணவு வழங்கப்படும் முறையில் தொடர் கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

தமிழக அரசு, அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவுத்திட்டத்தை மாணவர்களின் உடல்நலனில் அக்கறை கொண்டு குற்றச்சாட்டுக்கு இடம் கொடுக்காத வகையில் முறையாக செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal