சமீபத்தில்தான் மகளிர் ஆணைய தலைவராக திருமதி ஏ.எஸ்.குமரி பதவியேற்றார். பதவியேற்ற சில தினங்களிலேயே அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு இரு பெண்களை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே உள்ள மேல பெருமாள் சேரி கிராமத்தில் வசித்து வருபவர் அம்சா. இவருக்கு சங்கீதா, மதுமிதா என்ற இரு பெண் குழந்தைகள் இருக்கின்றன. சங்கீதாவிற்க பதினேழு வயதாகிறது. இந்த நிலையில்தான் தனியாக தவித்து வந்த இரண்டு இளம் பெண்களை தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமரி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மகளிர் ஆணை உறுப்பினர் வரலட்சுமி மதுசூதுதனன் முயற்சியில் பேரில் மீட்கப்பட்டுள்ளனர்.
கல்பாக்கம் அருகே உள்ள மேல பெருமாள் சேரி கிராமத்தில் சங்கீதா மற்றும் மதுமிதா ஆகியோர் ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ஒரு உருக்கமான வீடியோவை வெளியிட்டிருக்கின்றனர். அந்த வீடியோவில், தாங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், காவல்துறையின் மீதும் எங்களுக்கு நம்பிக்கை போய்விட்டது. எனவே, எங்களது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், முதல்வர் தலையிட்டு காப்பாற்ற வேண்டும் என்று உருக்கமாகப் அந்த வீடியோவில் பேசியிருக்கின்றனர்.
இந்த வீடியோவைப் பார்த்து உருகிப்போன மகளிர் ஆணைய தலைவி ஏ.எஸ்.குமரி மற்றும் மதுசூதனன் வரலட்சுமி ஆகியோர் எடுத்த முயற்சியால் மீட்கப்பட்டு, சானடோரியத்தில் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில்தான் இருபெண்களின் தாயாரான அம்சா என்பதை சந்தித்து இரண்டு பெண்களும் நலமாக இருப்பதை மகளிர் ஆணைய உறுப்பினர்கள் உறுதி செய்தனர்.
விஞ்ஞானம் விண்ணைத் தொட்டுக்கொண்டிருக்கும் வேளையில், இரு பெண்களை தனிமைப்படுத்தப்பட்ட விவகாரம்தான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது!