உக்ரைன் – ரஷ்யா இடையே போர் உச்சத்தை தொட்டிருக்கும் நிலையில், இந்தியாவிடம் உக்ரைன் உதவி கேட்டிருப்பது உலக நாடுகளை கவனிக்க வைத்திருக்கிறது.

இந்தியாவிற்கான உக்ரைன் தூதர் இகோர் பொலிகா கூறியதாவது, ‘‘போரை நிறுத்துவதற்கு, இந்திய தலைவர்களின் நிரந்தர ஆதரவிற்காக நாங்கள் காத்திருக்கிறோம். இந்த தருணத்தில், இந்தியாவின் ஆதரவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். ஜனநாயக அரசுக்கு எதிராக சர்வாதிகார ஆட்சியின் ஆக்கிரமிப்பு ஏற்பட்டால், இந்தியா தனது உலகளாவிய பங்கை ஏற்க வேண்டும்.

எத்தனை உலக தலைவர்களின் பேச்சை புடின் கேட்பார் என்பது எனக்கு தெரியாது. ஆனால், மோடியின் நிலை, அவரது வலுவான குரல் ஆகியவற்றால், புடினை குறைந்தபட்சம் சிந்திக்க வைக்கும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. இந்திய அரசிடம் இருந்து சாதகமான அணுகுமுறையை எதிர்பார்க்கிறோம்’’ இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal