கொரோனா பரவல் காரணமாக பலரது வாழ்வாதாரமும் முடங்கி இருந்தது. பல்வேறு நிறுவனங்கள் கொரோனாவால் பின்னடைவை சந்தித்துள்ளன. இதில் பெரிய நெருக்கடியை சந்தித்துள்ளது சினிமா துறை.

மலையாள படமான பிரேமம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் சாய் பல்லவி. அதன்பிறகு மாரி 2 படத்தின் மூலம் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழி படங்களிலும் பிஸியாக உள்ளார்.

சமீபத்தில் வெளியான ஷாம் சிங்கா ராய் என்ற படத்தில் நானிக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருந்தார். இப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் சாய்பல்லவி கொரோனா பரவலுக்கு முன்பாகவே ஒரு தமிழ் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்திற்காக இரண்டு மடங்கு சம்பளம் பேசப்பட்டுள்ளது, அதாவது கிட்டத்தட்ட 4.5 கோடிக்கு மேல். இந்நிலையில் கொரோனா பரவலுக்கு பின்பு சினிமா துறை மிகவும் பின்தங்கியுள்ளது. இதனால் பல நடிகர், நடிகைகளும் தங்களது சம்பளத்தை குறைத்துள்ளனர். இதனால் சாய் பல்லவிடம் அந்த தயாரிப்பாளர் நீங்களும் சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுள்ளார்.

ஆனால் சாய் பல்லவி சம்பளத்தை குறைக்க மறுப்பு தெரிவித்து அந்த படத்திலிருந்து விலகி விட்டாராம். இதனால் அந்த படக்குழுவும், தயாரிப்பாளரும் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் அந்தப் படத்திற்கு வேறு ஒரு கதாநாயகியை தேடிக் கொண்டிருக்கின்றனர் தயாரிப்பாளர். அடுத்தப்படியாக தமிழில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க சாய்பல்லவி ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தை சோனி நிறுவனத்துடன் இணைந்து கமல் தயாரிக்கவுள்ளார். ஒருவேளை அந்த தயாரிப்பாளர் கமலா கூட இருக்க வாய்ப்பு உள்ளதாம். ஆனால் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தால் மட்டுமே உண்மை நிலவரம் தெரியவரும்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal