நாளை நகர்ப்புற தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில், இன்றைக்கு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு எஸ்.பி.வேலுமணி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது அ.தி.மு.க.வினரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

இதற்கு காரணம், எதிர்க்கட்சி தரப்பிற்கு கோவை மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றும் என்று இன்றைக்கு கொடுத்த ரகசிய ரிப்போர்ட்டின் அடிப்படையில்தான் எஸ்.பி.வேலுமணியின் இந்த தர்ணா போராட்டம் என்கிறார்கள்!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாவட்டத்தின் தற்போதை முழு நிலவரத்தை அறிய, அங்கிருக்கும் நடுநிலையாளர்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘எம்ஜிஆர் காலம்தொட்டே அதிமுகவின் கோட்டையாக கொங்கு மண்டலம் திகழ்கிறது. பின்னர் செல்வி ஜெயலலிதாவின் காலத்தில் கோவை அதிமுகவின் எங்கு கோட்டையாகவே மாறியது. அவரது மறைவிற்குப் பிறகு அதிமுகவிற்கு வலுவான தலைமை இல்லாததால் இனி பெரிய அளவில் வெற்றி பெற முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், பா.ஜ.க.விற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு இருந்த நிலையிலும், அதிமுக-, கூட்டணி வைத்த நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் இக்கூட்டணி வெற்றியை அறுவடை செய்துள்ளது. திமுக ஆட்சியை கைப்பற்றினாலும் கொங்குவில் ஒரு இடத்தை கூட கைப்பற்ற முடியவில்லை.

இதுவரை கொங்கு எப்போதுமே திமுகவுக்கு கைகூடாத கோட்டையாகவே இருந்து வருகிறது.குறிப்பாக தங்கமணி, வேலுமணியின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி போன்றோர் கொங்கு பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால், இயல்பாகவே அதிமுக என்பது நமக்கான கட்சி என்ற மனநிலை கொங்கு பகுதி மக்களிடையே உருவாகியிருப்பதே அங்கு அதிமுக இவ்வளவு பெரிய வெற்றி பெற காரணமாக சொல்லப்படுகிறது. இந்தநிலையில்தான் எதிர் வரும் உள்ளாட்சி மன்ற தேர்தலுக்குள் கொங்குவை கைப்பற்றியே ஆக வேண்டும் முனைப்பு அதிகரித்துள்ளது.

கொங்கு மண்டலத்தில் திமுகவின் செல்வாக்கு நிறைந்த பகுதியாக மாற்ற வேண்டும் என்பதற்காகவும், எதிர் வருகிற மேயர் தேர்தலிலாவது கோவையை கைப்பற்றி விட வேண்டும் என்று கணக்கு போட்டுவரும் ஸ்டாலின் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் பாலாஜியை கோவை மாவட்டத்தின் பொறுப்பாளராக நியமித்துள்ளார். அதற்காக கோவை பகுதியிலேயே தங்கியிருந்து கோவையில் திமுகவின் செல்வாக்கு உயர்த்த செந்தில்பாலாஜி அயராது பாடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக கொங்கு மண்டலத்தை சேர்ந்த அதிமுக வில் ஓரங்கட்டப்பட்ட அடிப்பட்ட புள்ளிகளை திமுக பக்கம் இழுக்கும் முயற்சியில் செந்தில்பாலாஜி களமிறங்கி காய் நகர்த்தி வெற்றியும் கண்டார்.

நடைபெற உள்ள நகர்ப்புற தேர்தலில் தன்னால் இயன்ற அளவுக்கு செந்தில் பாலாஜி சுற்றிச் சுழன்று வருவதாகவு கட்டி பாகுபாடின்றி கூறி வருகின்றனர். மறுபுறம் எப்படியும் கொங்கு அதிமுகவின் கோட்டை என்பதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் மறுபுறம் எஸ்.பி வேலுமணி தாராளம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்காக உ.பிக்களை வறுத்தெடுத்து வருவதாகவும் இரவு 2 மணிக்குக்கூட போன் செய்து தேர்தல் பணிகளை முடுக்கி விட்டு வருகிறார்.

  • கொங்கு மண்டலத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் சக்கர பாணியை மாற்றி விட்டு செந்தில் பாலாஜிக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுகவில் கவுண்டர் சமூகத்தை சேர்ந்த பல நிர்வாகிகள் இருந்தாலும், அரசியலை துணிச்சலாக எதிர்கொள்ளவும், பொருளாதாரரீதியாக சிறப்பாக செயல்படவும் அதிமுகவில் உள்ள எஸ்.பி.வேலுமணிக்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு திறமையானவர் செந்தில் பாலாஜிதான்.

வழக்கமாக உள்ளாட்சித் தேர்தல்களில் கவுன்சிலர் போன்ற இடங்களுக்கு பணம் வாங்கிக் கொண்டு தான் சீட்டு வழங்குவார்கள். ஆனால் செந்தில் பாலாஜிக்கு பணம் ஒரு பொருட்டு அல்ல என்பதால் யார் உண்மையிலேயே வெற்றி பெறுபவர்கள். யார் செல்வாக்கு உள்ளவர்கள் என்பதை அறிந்து அவர்களுக்கு சீட்டு வழங்கியிருக்கிறார். கட்சி ஒரு சர்வே நடத்தினால், செந்தில்பாலாஜி தனிப்பட்டமுறையில் ஒரு சர்வே நடத்தி வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதை அறிந்து அவர்களுக்கு சீட் வழங்கியிருக்கிறார். இதை அதிமுகவினரே கூட பாராட்டி சொல்வதைக் கேட்க முடிகிறது. ஆக, மொத்தத்தில் கோவையில் திமுக மேயர் வரவே அதிகம் வாய்ப்புள்ளது. எஸ்.பி.வேலுமணியுன் கோட்டையை தகர்த்து தி.மு.க.வின் கோட்டையாக மாற்றி சரித்திரம் படைக்கப் போகிறார் செந்தில் பாலாஜி. இது வருகிற 22&ந்தேதி தெரியவரும்’’ என்று அடித்துக் கூறினர்.

யார் யாருடைய கோட்டையை தகர்க்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal