சசிகலா புஷ்பாவின் இரண்டாவது கணவரும், வழக்கறிஞருமான ராமசாமியின் வீட்டில், சிலர் நிர்வாண கோலத்தில் இருந்தது தொடர்பாக, மனைவி மீது, அவரது கணவர் புகார் அளித்திருந்தார். இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியிருக்கிறது.

அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்பி, மேயர் சசிகலா புஷ்பா தற்போது பாஜகவில் இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் தனது கணவனை பிரிந்து இரண்டாவதாக ராமசாமி என்ற வழக்கறிஞரை திருமணம் செய்து கொண்டனர்.ஏற்கனவே திருமணம் ஆன ராமசாமி தனது மனைவியை புரிந்துவிட்டு சசிகலா புஷ்பாவுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் ராமசாமிக்கும் சசிகலா புஷ்பாவிற்கு இடையில் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இவர்கள் அண்ணா நகரில் உள்ள ராமசாமிக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் சசிகலா புஷ்பாவை பார்க்க சில ஆண்கள் அவ்வப்போது வந்து சென்றதாக கூறப்படுகிறது. ஆண்களை வீட்டிற்கு அழைத்து வர கூடாது என்று ராமசாமி எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சசிகலா புஷ்பா ராமசாமிக்கு இருவருக்கும் இடையில் கடந்த சில நாட்களாக சண்டை முற்றியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் பணி நிமித்தமாக ராமசாமி வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி உள்ளார்.

அப்போது சசிகலா புஷ்பா தனது வீட்டில் போதையில் படுத்து கிடந்ததாக ராமசாமி புகார் அளித்துள்ளார். மேலும் வீட்டில் பல இடங்களில் ஆண் உறைகள் கிடந்ததாகவும்., வீடு முழுக்க பல இடங்களில் மது பாட்டில் கிடந்ததாகவும், இன்னொரு அறையில் பெண் ஒருவர் போதையில் இருந்ததாகவும் ராமசாமி குற்றஞ்சாட்டி உள்ளார். இன்னொரு அறையில் ஆண் அரைகுறை ஆடையுடன் கிடந்ததாகவும் ராமசாமி குற்றஞ்சாட்டி உள்ளார். இந்த நிலையில் அதை உடனே ராமசாமி வீடியோவாக எடுத்துள்ளார்.

அதோடு போலீசுக்கும் தகவல் கொடுத்துள்ளார். ஆனால் போலீஸ் வருவதற்கு முன் அந்த அறையில் அரைகுறை ஆடையுடன் இருந்த ஆணும், சசிகலா புஷ்பாவும் ராமசாமியை தாக்கி அவரின் போனில் இருந்த வீடியோவை டெலிட் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் ராமசாமி புகாரின் பெயரில் சசிகலா புஷ்பா மீது போலீசார் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேபோல் அந்த வீட்டில் இருந்த அமுதா, தஞ்சாவூர் ராஜா என்பவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

சிகலா புஷ்பாவுக்கு எதிராக அவரது கணவர் ராமசாமி அளித்த புகாரின் அடிப்படியில் ஜெ.ஜெ.நகர் போலீஸ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில், காவல் துறையினர் தன்னை கைது செய்யக் கூடும் என அஞ்சி, முன் ஜாமீன் வழங்கக்கோரி முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதில் இன்று சசிகலா புஷ்பா தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம் வைத்தது.

அதில், தொழில் சம்பந்தமாக தன்னை சந்திக்க வந்த இருவரும் புறப்பட 11 மணிக்கு மேலாகி விட்டதாகவும், கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் வீட்டில் தங்க அனுமதித்ததாகவும், தனக்கு எதிராக பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். தனது கணவர் ராமசாமி தான், தன்னை மிரட்டியதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன் விசாரணைக்கு வந்த போது, புலன் விசாரணை நிலுவையில் உள்ளதால் சசிகலா புஷ்பாவுக்கு முன் ஜாமீன் வழங்க கூடாது என காவல்துறை தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal