உலக காதலர் தினத்தை முன்னிட்டு, கோலிவுட்டின் பிரபல காதல் ஜோடிகளான நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தங்களுக்குள் பரிசுகளை பரிமாறி, காதலர் தினத்தை கொண்டாடினர்!

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார், நயன்தாரா ஐயா படம் மூலம் தனது கோலிவுட் அறிமுகத்தைத் தொடங்கினார். அதன் பின் சந்திரமுகி, பில்லா, யாரடி நீ மோகினி படங்கள் மூலம் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார். அதன் பின்னர் ரீ என்ட்ரி ஆகி ராஜாராணி, ஆரம்பம், அறம், விஸ்வாசம் படங்களில் அவர் தனது சிறந்த நடிப்புத் திறமையால் ரசிகர்களின் இதயங்களை வென்றதால் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்பட்டார்.

இவர் கடைசியாக தமிழில் நெற்றிக்கண், அண்ணாத்த படங்களில் காணப்பட்டார். தற்போது தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கிறார். இது போக சிரஞ்சீவி நடிப்பில் காட்பாதர், ஷாருக்கான் மற்றும் அட்லியின் படம், அல்போன்ஸ் புத்ரனின் கோல்ட் படங்களில் நடிக்கிறார்.

சமீபத்தில் காட்பாதர் படத்திற்கான படப்பிடிப்பை ஆரம்பித்தார் என செய்திகள் வெளியானது. இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக ஊடகங்களில் நயன்தாரா உடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

காதலர் தினத்தன்று விக்னேஷ் சிவன் தனது வலைதள பக்கத்தில், ” காத்துவாக்குல ஒரு காதல்” என கேப்சன் போட்டு, “சுற்றியுள்ள அனைத்து அன்பர்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்! காதல்! அதுவே இந்த வாழ்க்கையை நிறைவு செய்கிறது…. எனவே! காதலிக்கவும் மற்றும் நேசிக்கப்படுவதற்கும் நேரமும் ஆர்வமும் வேண்டும்!” என காதலர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

நயன்தாராவும் விக்னேஷ் சிவனுக்கு பூங்கொத்து கொடுத்து ஆரத்தழுவி காதலர் தின வாழ்த்துகளை கூறியுள்ளார். இந்த வீடியோவும் இன்ஸ்டாகிராமில் வைரலாகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal