சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் முதல்காட்சியை தனுஷ் – ஜஸ்வர்யா மற்றும் மகன் இருவரும் ஒரே தியேட்டரில் பார்த்தனர். இது தனுஷ் மற்றும் ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

கிரீஸ் நாட்டில் நடக்கும் அனிருத் திருமணத்தில் ரஜினிகாந்த் குடும்பத்துடன் சேர்ந்து நடிகர் தனுஷ் கலந்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இசையமைப்பாளர் அனிருத்துக்கும் அவரின் காதலியான தொழில் அதிபர் காவ்யா மாறனுக்கும் நவம்பர் 11ம் தேதி திருமணம் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கிரீஸில் நடக்கவிருக்கும் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்து கொள்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்நிலையில் தங்கள் குடும்பத்துடன் தனுஷையும் அழைத்துச் செல்ல முடிவு செய்திருக்கிறார் ரஜினி. அதனால் அனிருத் திருமணத்தில் ரஜினிகாந்த் குடும்பத்துடன் தனுஷை பார்க்கலாம் என்கிறார்கள்.

தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்திற்கு பிறகும் ரஜினியுடன் நெருக்கமாக இருந்து வருகிறார் தனுஷ். மேலும் மகன்கள் யாத்ரா, லிங்கா விரும்பிய நேரம் எல்லாம் அப்பா உடன் நேரம் செலவிடுகிறார்கள், பயணம் செய்கிறார்கள். ‘என் வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயமே என் பிள்ளைகள் தான். நான் ஒரு நல்ல அப்பா என்பேன்’ என அவ்வப்போது கூறி வருகிறார் தனுஷ். ஐஸ்வர்யாவும் தனுஷுடன் நட்பாக பழகி வருகிறார்கள். இந்நிலையில் அவர்கள் எல்லாம் ஒரு குடும்பமாக கல்யாணத்திற்கு செல்லவிருக்கிறார்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்கள் ரிலீஸானால் சென்னையில் இருக்கும் பிரபல தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க வந்துவிடுகிறார் தனுஷ். கடந்த 15ம் தேதி ரிலீஸான ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தின் முதல் நாள் முதல் காட்சியை தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த் ஆகியோர் ஒரே தியேட்டரில் பார்த்தார்கள். தற்போது திருமணத்திற்கு தனுஷை அழைத்துச் செல்ல ரஜினிகாந்த் குடும்பம் முடிவு செய்திருக்கும் தகவலை கேட்ட தனுஷ் ரசிகர்களோ, அவர்கள் விவாகரத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் சேர்ந்துவிடக் கூடாதா என தங்களின் விருப்பதை சமூக வலைதளங்களில் பதிவு செய்யத் துவங்கிவிட்டார்கள்.

தனுஷின் 3 படம் தான் அனிருத்தை இசையமைப்பாளர் ஆக்கியது. அனிருத், தனுஷ் இடையே நல்ல ரிலேஷன்ஷிப் உள்ளது. இந்நிலையில் தனுஷின் புதுப்படம் ஒன்றுக்கு இசையமைக்கப் போகிறார் அனிருத் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. அனிருத் திருமண தகவல் வெளியானதில் இருந்து அது தான் சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது.

தவிர, ‘அனிருத் இசையமைப்பாளர் ஆனதற்கு காரணமே தனுஷ்தான்’ என்று சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேட்டி ஒன்றில் சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal