நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க. வேட்பாளர்களை எதிர்த்தும், தோழமைக் கட்சி வேட்பாளர்களை எதிர்த்தும் போட்டியிட்ட 56 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த அதிரடி நடவடிக்கை உடன்பிறப்புக்களை கொஞ்சம் ஆட்டம் காண வைத்திருக்கிறது!
இது தொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில், தி.மு.க. வேட்பாளர்களை எதிர்த்தும், தோழமைக் கட்சி வேட்பாளர்களை எதிர்த்தும் போட்டியிட்ட 56 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
சென்னை வடகிழக்கு மாவட்டம், திருவொற்றியூர் கிழக்கு பகுதி, 7-வது வட்ட செயலாளர் பி.ஆதிகுருசாமி- மாதவரம் வடக்கு பகுதி, 23-வது வட்டத்தை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர் என்.மேனகா நித்யானந்தம், 23-வது வட்டச் செயலாளர் என்.சரவணன்- திருவொற்றியூர் மேற்கு பகுதி, 2-வது வட்டத்தை சேர்ந்த மாவட்ட பிரதிநிதி சந்தோஷ்குமார்- மாதவரம் தெற்கு பகுதி, 25-வது வட்ட பிரதிநிதி பி.லோகநாதன்- செங்குன்றம் பேரூர் தி.மு.க., 3-வது வார்டை சேர்ந்த இலக்கிய அணி அமைப்பாளர் கே.ராஜேந்திரன், 8-வது வார்டு துணை செயலாளர் எஸ்.முனிகிருஷ்ணபாபு, 14-வது வார்டு, மாவட்ட கலை, இலக்கிய பேரவை துணை அமைப்பாளர் க.கு.இலக்கியன்,
சென்னை தெற்கு மாவட்டம், மதுரவாயல் வடக்கு பகுதி, 92-வது வட்டத்தை சேர்ந்த கே.நீலகண்டன், 144-வது வட்டத்தை சேர்ந்த பகுதி துணை செயலாளர் எம்.எம்.சீதாபதி, 147-வது வட்டத்தை சேர்ந்த பகுதி பிரதிநிதி ப.ரமேஷ்காந்தன், காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், ஆலந்தூர் வடக்கு பகுதி, 158-வது வட்டத்தை சேர்ந்த மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் பெருமாள், மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் கிரிஜா பெருமாள்- தாம்பரம் நகரம், 50-வது வார்டை சேர்ந்த மாவட்ட பிரதிநிதி இரா.செல்வகுமார்- செம்பாக்கம் நகரம், 1-வது வார்டு செயலாளர் ஜெயபிரதீப் சந்திரன்;
விழுப்புரம் மத்திய மாவட்டம், விழுப்புரம் நகரம் 28-வது வார்டு செயலாளர் வடிவேல் பழனி- விக்கிரவாண்டி பேரூர், 9-வது வார்டை சேர்ந்த பேரூர் துணைச் செயலாளர் சு.வீரவேல், 6-வது வார்டை சேர்ந்த பேரூர் பொருளாளர் ஜி.சேகர், திருப்பூர் மத்திய மாவட்டம், திருப்பூர் வடக்கு மாநகர பொறுப்புக்குழு உறுப்பினர் வி.வி.ஜி.காந்தி மற்றும் வேலம்மாள்- திருப்பூர் தெற்கு மாநகர பொறுப்பு குழு உறுப்பினர் க.ரவி, திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி, அண்ணா காலனி பகுதி பிரதிநிதி சிதம்பரம் மற்றும் கீதா.
தருமபுரி மேற்கு மாவட்டம், பென்னாகரம் ஒன்றியம், பாப்பாரப்பட்டி பேரூர் துணைச் செயலாளர் ஹாஜீராபி தவுலத்பாஷா மற்றும் தவுலத்பாஷா- பாலக்கோடு வடக்கு ஒன்றியம், மாரண்ட அள்ளி பேரூரை சேர்ந்த மாவட்ட பிரதிநிதி எம்.ஆர்.கார்த்திகேயன், தஞ்சை மத்திய மாவட்டம், தஞ்சாவூர் மாநகராட்சி 3-வது வார்டை சேர்ந்த தஞ்சை தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஆர்.சுலைமான், 7-வது வார்டை சேர்ந்த 7-வது வட்ட பிரதிநிதி எம்.குளஞ்சியப்பா, 19-வது வார்டை சேர்ந்த 19-வது வட்ட பிரதி நிதி எம்.ராமச்சந்திரன், 21-வது வார்டை சேர்ந்த நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் கே.ராணி, 32-வது வார்டை சேர்ந்த நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் டி.சி.எஸ்.செல்வகுமார், 34-வது வார்டை சேர்ந்த 44-வது வட்ட பிரதிநிதி எஸ்.செந்தில், 36-வது வார்டை சேர்ந்த 43-வது வட்ட செயலாளர் ஜி.துளசிராமன் மற்றும் டி.பரிதா, 39-வது வார்டை சேர்ந்த 48-வது வட்ட செயலாளர் பெ.செல்வம் மற்றும் வெண்ணிலா, 42-வது வார்டை சேர்ந்த 41-வது வட்ட பிரதிநிதி வி.செந்தில்குமார் மற்றும் தேவகி,
43-வது வார்டை சேர்ந்த கேபிள் முருகன் மற்றும் சரிதா முருகன், 44-வது வார்டை சேர்ந்த ஜாபர் மற்றும் மும்தாஜ் பேகம்- வல்லம் பேரூரை சேர்ந்த 3-வது வார்டு சிவகுமார் மற்றும் கீதா சிவக்குமார், 11-து வார்டு இருதயராஜ் மற்றும் ஈவ்லின் ஜூலியட் இருதயராஜ், 14-வது வார்டு கலாதேவி- ஒரத்தநாடு பேரூரை சேர்ந்த 1-வது வார்டு குணசேகர் மற்றும் மழலைச்செல்வி குணசேகர்- திருப்பூர் தெற்கு மாநகர பொறுப்புகுழு உறுப்பினர் க.ரவி, திருக்காட்டுப்பள்ளி பேரூரை சேர்ந்த 8-வது வார்டு செயலாளர் த.திருஞானசம்பந்தம், 8-வது வார்டு பொருளாளர் பி.காளிமுத்து- மேலத்திருப்பூந்திருத்தி பேரூரை சேர்ந்த 4-வது வார்டு, பேரூர் நெசவாளர் அணி க.முரளி, திருவையாறு பேரூரை சேர்நத 14-வது வார்டு, பேரூர் இளைஞர் அணி துணை அமைப்பாளர் திபேஷ்பிரியா;
சேலம் மத்திய மாவட்டம், சேலம் மாநகர துணை செயலாளர் லலிதா சுந்தரராஜன், 7-வது வட்ட முன்னாள் செயலாளர் சுந்தரராஜன்- சேலம் மாநகரம், 9-வது வட்ட முன்னாள் செயலாளர் சி.மோகன் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்’’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தி.மு.க. வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடுபவர்கள் பற்றிய விபரங்களை உடனடியாக அனுப்புமாறு ஏற்கனவே முதல்வர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், போட்டி வேட்பாளர்கள் ‘வாபஸ்’ வாங்காத நிலையில் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது தி.மு.க. தலைமை!