தமிழக சட்டசபை சிறப்புக் கூட்டம் இன்று காலை கூடும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.-க்களுடன் ஆலோசனை நடத்தினார்.

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதையடுத்து, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அப்போது தமிழக சட்டசபை சிறப்புக் கூட்டத்தை கூட்டி மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தப்பட்டது.

அதன்படி இன்று காலை 10 மணிக்கு சிறப்புக் கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். அதன்படி இன்று சிறப்புக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.-க்களுடன் சட்டசபை வளாகத்தில் ஆலோசனை நடத்தினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal