2022 – 2023 ஆம் நிதியாண்டில் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழள் 80 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மேலும், மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:
*1-12ம் வகுப்புக்கு மாநில மொழிகளில் பாடம் நடத்த கூடுதலாக 200 கல்வி டிவி சேனல்கள் அறிமுகபடுத்தப்படும்.
*ஒரு வகுப்புக்கு ஒரு தொலைகாட்சி அடிப்படையில் கூடுதல் டிவி சேனல்கள் அறிமுகமாகும்.
*2000 கி.மீ., தொலைவு ரயில்வே கட்டமைப்பு விரிவுபடுத்தப்படும்
*டிவி சேனல் ஒரு வகுப்பு ஒரு தொலைகாட்சி அடிப்படையில் கூடுதல் டிவி சேனல்கள்
*டிஜிட்டல் முறை கற்பித்தல் ஊக்குவிப்பு; டிஜிட்டல் பல்கலை அறிமுகம்

*சிறு தொழில் நிறுவனங்களுக்கு கூடுதலாக ரூ.2 லட்சம் கடன்
*40 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்க நடவடிக்கை
*வடகிழக்கு மாநிலங்களின் பிரதமர் மேம்பாட்டு திட்டம் அறிமுகம் செய்யப்படும்.
*பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 18 லட்சம் வீடுகள் -ரூ.48,000 கோடி
*இந்தியாவில் தொடர்ந்து ஆன்லைன் பணப்பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது.
*25 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி மையங்கள் அமைப்பு
*கோர் பேங்கிங் அமைப்பு மூலம் 1.5 லட்சம் அஞ்சலகங்கள் இணைப்பு.
*டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயலிகளை பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை
*மின்னணு பாஸ்போர்ட் வசதி அறிமுகம்
*மேக் இன் இந்தியா திட்டம் மூலம் 60 லட்சம் வேலைவாய்ப்புகள்
*ஏற்கனவே நடைமுறையில் இருந்த 1,486 பழைய சட்டங்கள் நீக்கப்பட்டு விட்டன.
*தொழில் துவங்குவதை எளிமையாக்க புதிய திட்டம்
*உற்பத்தி துறையில் ஒற்றை சாளர முறையில் அனைத்திற்கும் அனுமதி
*உற்பத்தி, பருவநிலை, நிதி, கதிசக்தி ஆகியவை முக்கியத்துவம்
*நகர்ப்புறங்களில் பொது போக்குவரத்து பயன்பாடு ஊக்குவிக்கப்படும்

*கிராமப்புறங்களில் தொழில்நுட்ப வசதிகள் மேம்பாடு
*மெட்ரோ திட்டங்கள் மூலம் நகர்ப்புற போக்குவரத்து மேம்பாடு
*மலைவாழ் மக்களுக்கு போக்குவரத்தை எளிதாக்க பர்வத்மாலா திட்டம்
*திவாலான நிறுவனங்களை மூட கால அவகாசம் 2 ஆண்டுகளில் இருந்து 6 மாதங்களாக குறைப்பு
*தொலைதொடர்புத்துறையை மேம்படுத்த 2022ல் 5ஜி அலைக்கற்றை ஏலம்

*2023க்குள் 5ஜி சேவை வழங்க தொலைதொடர்புத்துறை மூலம் நடவடிக்கை
*அனைத்து கிராமப்பகுதிகளும் இ சேவை மையங்கள் மூலம் இணைப்பு; ஆப்டிகள் பைபர் மூலம் இணைக்கவும் நடவடிக்கை
*புதிய சட்ட திருத்தங்கள் மூலம் சிறப்பு பொருளாதார மண்டலங்களை மாற்றியமைக்க நடவடிக்கை
*அனைத்து கிராமங்களிலும் பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் இணைய வசதி ஏற்படுத்தப்படும்.

*ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு திட்டம்
*5 சிறப்பு நிறுவுனங்கள் மூலம் நகர்ப்புற உள்கட்டமைப்பு திட்டம் ஊக்குவிப்பு
*மின்சார வாகனங்கள் உற்பத்தி ஊக்குவிப்பு
*உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்பு திட்டத்திற்காக சோலார் துறையில் கூடுதலாக ரூ.19,500 கோடி ஒதுக்கீடு
*நிலக்கரியில் இருந்து ரசாயனம் மற்றும் எரிவாயு உற்பத்தி செய்ய தொழிற்சாலை

*உள்நாட்டில் சூரிய மின் உற்பத்திக்கு முன்னுரிமை
*அரசின் மூலதன செலவுகள் ரூ.7.50லட்சம் கோடியாக அதிகரிப்பு
*உள்நாட்டு சோலார் சூரிய மின்உற்பத்தி நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
*காரிய மில வாயு வெளியேற்றத்தை குறைக்க நடவடிக்கை
*ரத்தினங்கள், வைரங்கள் மீதான சுங்க வரி 5 சதவீதம் குறைப்பு
*உள்நாட்டு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகை 2022 வரை நீட்டிப்பு
*25 ஆயிரம் கி.மீ., நெடுஞ்சாலை விரிவுபடுத்தப்படும்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal