கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டவரும், தி.மு.க. சார்பில் போட்டியிட்டவரும் சேர்ந்து, வரும் இடைத்தேர்தலில் பெருந்துறை ஜெயக்குமாருக்கு வாக்கு சேகரிப்பார்கள்… முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விரைவில் த.வெ.க.வில் இணைகிறார் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு விராலிமலை, கரூர் அம்பாசமுத்திரம் பெருந்துறை உள்ளிட்ட ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அந்த வகையில் டிசம்பர் 20 ஆம் தேதிக்குள் தேர்தலை முடிக்க இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது இந்த தகவலை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. நவம்பர் மாத இறுதிக்குள் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக திருச்சி கிழக்கு தொகுதியை தவிர்த்து மீதமுள்ள ஐந்து தொகுதிகள் அதிமுக வசம் கொண்டவை . இதில் தாராபுரம் மற்றும் அம்பாசமுத்திரத்தில் தவெக வெற்றி பெற்று இரண்டாவது முறையாக மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா எம்எல்ஏவாக பொறுப்பேற்று உள்ளனர்.
இந்த நிலையில் மீதம் இருக்கும் மூன்று தொகுதிகளில் அதிமுக எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. தற்போது இருக்கும் தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் செல்வாக்கு மத்தியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் அதிமுக தள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக வெற்றி பெற முடியாவிட்டாலும் இரண்டாவது இடத்தை பிடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிமுகவினர் இடையே இருப்பதாக கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில், எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் அதிமுகவினர் சிலர் தமிழக வெற்றி கழகத்தில் இணைவார்கள் என்றுசெங்கோட்டையன் அடிக்கடி கூறிவந்த நிலையில் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விரைவில் இணையுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், ‘த.வெ.க.வில் இணைந்து ஜெயக்குமாருக்கு வாக்கு சேகரிப்பார் தோப்பு வெங்கடாச்சலம். இதனால், தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளின் வாக்குகளும் த.வெ.க.விற்கு விழும்’ என்றார்.

இதற்கிடையே தோப்பு வெங்கடாச்சலத்திடம் அ.தி.மு.க.வின் சீனியர் நிர்வாகி ஒருவரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். ‘த.வெ.க.வில் உங்களுக்கு (சீனியர்களுக்கு) உரிய மரியாதை கிடைப்பதில்லை. அக்கட்சியின் தலைவர் விஜய்யை யாராலும் சென்று எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலினைப் போன்று பார்க்க இயலாது. எனவே, தாய்க்கழகமான அ.தி.மு.க.வில் இணையுங்கள்’ என்று அந்த சீனியர் வற்புறுத்தி வருகிறாராம்.
த.வெ.க.வா? அ.தி.மு.க.? என மதில்மேல் பூனையைப் போல் தோப்பு வெங்கடாச்சலத்தின் நிலைமை இருக்கிறது. என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பது ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்!
