தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வருகிற நவம்பர் 14ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ள அம்பாசமுத்திரம் செல்ல உள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு உட்பட ஏழு தொகுதிகள் காலியாக இருந்த நிலையில், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அண்மையில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டன. அதேநேரம் அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா தொடர்பான வழக்கும் முடிவுக்கு வந்தது. இதையடுத்து காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கு எப்போது வேண்டும் என்றாலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என்கிற நிலை உள்ளது.
இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் போட்டியிட பணிகளை முடுக்கிவிட்டு வருகின்றன. அண்மையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இடைத்தேர்தல் தொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் தொகுதி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த நிலையில் தான், இடைத்தேர்தல் நடைபெற உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் செல்ல முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, முதல் தொகுதியாக காலியாக உள்ள அம்பாசமுத்திரம் தொகுதிக்கு செல்ல தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளார். குழந்தைகள் தினத்தை வெட்டி இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு கேக் துண்டு வழங்கப்பட உள்ளது. இந்த விழாவை முதலமைச்சர் விஜய் அம்பாசமுத்திரத்தில் கொண்டாடுகிறார் என்றும், அம்பாசமுத்திரத்தில் உள்ள அரசு பள்ளியில் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறும் குழந்தைகள் தின விழாவில் கலந்துகொண்டு அந்த விழாவை தொடங்கி வைக்கிறார் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதேபோல், இடைத்தேர்தல் நடைபெற உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் இதே போல செல்ல பயணம் திட்டமிட்டுள்ள அவர் நவம்பர் முதல் வாரத்தில் பெருந்துறை மற்றும் விராலிமலை தொகுதிகளில் அரசு திட்டங்களை தொடங்கி வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அம்பாசமுத்திரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுவதாக அறிவித்துள்ளதும், அவரை பொது வேட்பாளராக நிறுத்துவது தொடர்பாக விவாதங்கள் எழுந்துள்ள நிலையிலும் முதலமைச்சர் விஜய்யின் அம்பாசமுத்திரம் பயணம் தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.
முதல்வர் விஜய் அம்பாசமுத்திரம் செல்வது ‘இடைத்தேர்தல் கணக்கு’தான் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்!
